HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

தரங்கம்பாடி அருகே 19 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை என விவசாயிகள் சாலை மறியல்..

Farmers road blockade

Farmers’ road blockade : தரங்கம்பாடி அருகே 19 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் மற்றும் விவசாயிகள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே முக்குட்டு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து 2 /1/2024 லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து கடந்த 2022 மற்றும் 2023 ஆம் வருடத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்த 19 ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

Farmers'-road-blockade.jpg
Farmers’-road-blockade.jpg

Farmers’ road blockade

மேலும் கடந்த மாதம் நடத்திய போராட்டத்தில் 10 தினங்களுக்குள் காப்பீட்டு தொகையினை தருவதாக உறுதி அளித்த நிலையில் தற்போது வரை அந்த தொகையை வழங்காததால் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்கிட வலியுறுத்தி கோஷங்களை முழங்கினார்கள். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Read Also : மாப்படுகையில் பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் நடை பயண பேரணி..

அதனை தொடர்ந்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் சுப்பையன் பயிர் காப்பீட்டு தொகையினை ஜனவரி 30 ஆம் தேதிக்குள் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார்கள். அதனால் தற்காலிகமாக இந்த போராட்டத்தை விலக்கி கொண்டனர். இந்த சாலை மறியலால் மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் பகுதிகளிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது.

Read Also : கொய்யாபழத்தை தினமும் சாப்டுவதால் கிடைக்கும் நன்மைகள்!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்