HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

அதிமுக கூட்டணியில் காங்கிரசிற்கு கதவு திறந்தே இருக்கிறது. இனி பாஜகவோடு கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. ஜெயக்குமார் அதிரடி

Jayakumar Press Meet

Jayakumar Press Meet : அனைத்துக்கட்சி கூட்டணிகளும் திமுகவை விமரிசிக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி திமுகவிலிருந்து தானாகவே கலைந்துவிடும். என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு படம் வரைதல், யோகாசனம் செய்தல், cube னை பயன்படுத்தி அப்துல் கலாமின் உருவத்தினை கொண்டு வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

Jayakumar Press Meet
Jayakumar Press Meet இனி பாஜகவோடு கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. ஜெயக்குமார் அதிரடி

Jayakumar Press Meet : பாஜகவோடு கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை

அப்போது பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2015 ஆம் வருடம் வெள்ளதால் மக்கள் பாதித்த போது நிவாரணம் கொடுப்பதில் சிரமம் வரக்கூடாது என்பதற்காக மக்களுக்கு வங்கியில் அந்த நிவாரண தொகையை செலுத்தினோம்.

ஆனால் தற்போது திமுக அரசு கொடுக்கும் ரூபாய் 6000 தை வாங்குவதற்குள் போதுமென்று ஆகிறது. திமுக காரர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள நியாயவிலை கடைகளுக்கு உட்பட பயனார்களின் பட்டியலை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் வீடுகளுக்கு சென்று நேரிடையாக டோக்கன்களை விநியோகம் செய்யவில்லை.

திமுக காரர்கள் வைத்துள்ள பெயர் பட்டியலை நியாயவிலை கடைகளுக்கு முன்பாக ஒட்டி விட்டால் மக்களுக்கு கஷ்டம் ஏற்படாது. அந்த ரூபாய் 6000 தை வாங்குவதற்குள் எதோ அவர்கள் சொத்தை எழுதி கொடுப்பது போல் மக்களை மிகவும் சிரமப்படுத்துகிறார்கள். திமுக அரசு நிவாரண தொகையை வங்கிகளில் செலுத்தியிருக்கலாம்.

மாடர்ன் தியேட்டர் பற்றிய கேள்விக்கு பதிலத்த அவர், நில அபகரிப்பிற்கு சொந்தக்காரர்கள் திமுக காரர்கள் எனறார் அவர், ஜெயலலிதா காலத்தில் நில அபகரிப்பு சட்டம் திமுக காரர்களுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது. வேலியே பயிரை மேய்வது போல் அரசாங்கமே நில அபகரிப்பு செய்கிறது.

இன்று முதலமைச்சர் செல்பி எடுத்தாலே அது ட்ரெண்டாகி வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு மேனியா இருப்பது போன்று, ஸ்டாலினுக்கு சிலை மேனியை இருக்கிறது. அவர் அப்பாவின் சிலையை எங்குபார்த்தாலும் வைக்கவேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு இருக்கிறது. மக்கள் கொஞ்சம் ஏமாந்தால், கலைஞர் நாடு என்று தமிழ்நாட்டை மாற்றி விடுவார், ஸ்டாலின்.

தேர்தல் கூட்டணி தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியலில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. நாங்கள் ஜெயிக்க போகும் கட்சி எங்களுடன் யார் வந்தாலும் அவர்களுக்கு அங்கீகாரம் இருக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு உங்களோடு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் காங்கிரசிற்கு அதிமுக கூட்டணி கதவு திறந்து இருக்கிறது. ஆனால் நாங்கள் யாரையும் சென்று கூட்டணிக்கு அழைக்கமாட்டோம். ஆனால், அது பாஜகவிற்கு பொருந்தாது. அவர்களுக்கு அதிமுகவின் கதவுகள் மூடிவிட்டது.

தேர்தல் நடவடிக்கைகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் அனைத்துக்கட்சிகளும் தொடங்கிவிட்டன அதே போல் நாங்களும் தொடக்கி விட்டோம். அதை உரிய நேரத்தில் வெளிப்படையாக தெரிவிப்போம். நாங்கள் காங்கிரஸ் திமுக கூட்டணியை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்பொழுது உள்ள திமுக வினை அனைத்து கட்சிகளும் விமர்சித்து வரும் நிலையில் அதுவாகவே நெல்லிக்கனி போல கூட்டணி கலைந்து விடும். மின்கட்டணம், சட்டம் ஒழுங்கு, பால் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் எப்படி திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்