HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

5 லட்சம் கரும்புகளை அரசு கூட்டுறவு துறை மூலமாக நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

karumpu

Mayiladuthurai sugarcane : மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் 5 லட்சம் கரும்புகளை அரசு கூட்டுறவு துறை மூலமாக நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை, இதுவரை அரசு அறிவிப்பு வெளியிடாததால் விவசாயிகள் கலக்கம்:

இந்த வருடம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வானதிராஜபுரம் கடலங்குடி சீர்காழி அருகே செம்பதனிருப்பு, காத்திருப்பு, ராதாநல்லூர், அல்லிவிளாகம் போன்ற பல்வேறு கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் ஐந்து லட்சம் பொங்கல் கரும்புகள் பயிரடப்பட்டுள்ளது.

கரும்பானது மிகவும் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது. வருடந்தோறும் உரங்களின் விலை, ஆட்களின் சம்பளம் என்று ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்திருந்த நிலையில் பொங்கலுக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் பொங்கல் பரிசுக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கரும்பு வழங்குவது வழக்கம் அது குறித்து அரசாங்கம் சார்பில் எந்தவித அரசாணையும் வெளியிடவில்லை.

Mayiladuthurai sugarcane
Mayiladuthurai sugarcane

பொங்கலுக்கு அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்வது பற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படாதது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் பொங்கல் தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கி குடும்ப கார்டுதாரர்களுக்கு கரும்பு கொடுக்கப்பட்டது.

Watch Video : முடி பராமரிப்பில் உதவும் வெண்டைக்காய் எப்படி?

Mayiladuthurai sugarcane : நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

இதற்காக 33 ரூபாய் ஒரு கரும்புக்கு விலை நிர்ணயம் செய்த நிலையில், திமுக இடைத்தரகர்கள் கருப்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு கமிஷனாக மீதமுள்ள தொகையை வாங்கி சென்றார்கள். வானதிராஜபுரம் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியை புறக்கணித்து அங்கு கரும்பு கொள்முதல் செய்யவில்லை.

இதற்காக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள் .இந்நிலையில் இந்த வருடமாவது தங்களிடம் கரும்பை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யவேண்டும். என்று கோரிக்கை விடுத்தார்கள். இந்த வருடம் இடைத்தரகர்கள் மூலம் கரும்பினை கொள்முதல் செய்யாமல் அரசாங்கம் கூட்டுறவு சங்கம் மூலமாக நேரிடையாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கம் கொள்முதல் செய்யவில்லை என்றால் இந்த வருடம் கரும்பு விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துவிடும். விவசாயிகளுக்கு இந்த வருடம் பெரும் நஷ்டம் உண்டாகும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

Read Also : தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார் …

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்