HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

MLA given free bicycle by Govt : மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டியினை வழங்கிய எம்எல்ஏ , தனது தொகுதி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுதுவதற்கு இலவசமாக பேனா வழங்குவதாக அறிவிப்பு :-

MLA given free bicycle by Govt
MLA given free bicycle by Govt

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவிலிலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்று மாணவிகளிடையே உரையாற்றினார். பின்னர் 192 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை எம்எல்ஏ வழங்கினார்.

முன்னதாக அரசின் பல்வேறு சாதனைகளை பற்றி விளக்கிப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மாதம் தோறும் பெண்மணிகளுக்கு அரசு சார்பில் 1,000 ரூபாய் வழங்கி ஊக்குவித்து வருவதாகவும் பள்ளி முடித்துவிட்டு கல்லூரி செல்லக்கூடிய மாணவிகள் இந்த ஊக்கத் தொகையை பெற இருப்பதால் நன்கு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Read Also : சாதியை கூறி திட்டி தாக்கியதாக காவல் நிலைத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

அதன் பிறகு எதிர்வரும் பொது தேர்வில் தனது பூம்புகார் தொகுதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பூஜை செய்து பேனா வழங்க இருப்பதாகவும் எனவே மாணவர்கள் தான் பூஜை செய்து கொடுக்கும் பேனாவை மட்டும் நம்பி இல்லாமல் தங்களது திறமையை நம்பி செயல்பட்டு தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்