HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Mysterious youth near Tharangambadi : மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பரசலூர் மீனாட்சி நகர் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் பானுஸ்ரீதர்(21). பட்டதாரியான இவர் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில் வீட்டிற்கு வந்த பானுஸ்ரீதர் நேற்று முன்தினம் பிள்ளை பெருமாள் நல்லூர் கடற்கரையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மாயமானார்

Mysterious youth near Tharangambadi
Mysterious youth near Tharangambadi

இதுகுறித்து பான ஸ்ரீதரின் தாயார் கஸ்தூரி பொறையார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பானு ஸ்ரீதர் கடற்கரை வழியே புதுப்பேட்டை வரை நடந்து சென்றது தெரியவந்துள்ளது அதன் பின் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

Also Read : கருணாநிதியால் ஒழிக்க முடியாத தீண்டாமையை ஒழித்தவர் எம்ஜிஆர்… அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் புகழாரம்

இந்நிலையில் இறந்த பானு ஸ்ரீதரின் உடல் சந்திரபாடி கடற்கரையில் ஒதுங்கியுள்ளது .. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பழையார் போலீசார் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் பகுதியில் உள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்