HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் பேரணியில் 4 வயது சிறுவனுடைய சிலம்பாட்டம்

Nammalvar Memorial Day

Nammalvar Memorial Day : மயிலாடுதுறையில் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த பேரணியில் 4 வயது சிறுவனுடைய சிலம்பாட்டம் எல்லோரையும் கவர்ந்தது.

Nammalvar Memorial Day
Nammalvar Memorial Day

Nammalvar Memorial Day

மயிலாடுதுறையில் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு விவசாய சங்க கூட்டமைப்பு சார்பாக பேரணி நடைபெற்றது. விவசாயி ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த பேரணியை விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

Read Also : அதிமுகவுக்கு ஷாக் ! தூக்கிய பாஜக !

கூறைநாடு காந்திஜி சிலைக்கு மாலை அணிவித்த பின், இந்த பேரணியானது காந்திஜி ரோடு வழியாக கிட்டப்பா அங்காடி வந்தடைந்தது. பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வார் உருவ படத்திற்கு மலை அணிவித்து விவசாயிகள் மரியாதை செய்தார்கள். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், வேளாண்துறை துணை இயக்குனர் ஜெயபாலன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தை பற்றி பேசினர்.

மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் விவசாயிகளின் பிரச்சனைகளை பற்றியும் பேசினர். இதில் கரும்பு விவசாயிகள் சங்கம் போன்ற பல்வேறு சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நான்கு வயது சிறுவனின் மிக நேர்த்தியான சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியானது பேரணியில் கலந்துகொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Read Also : சுரைக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்..!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்