HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு அபிஷேகம்

Pongal Festival at Mayuranath Temple

Pongal Festival at Mayuranath Temple : பொங்கல் விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கும், சுவாமிக்கும் 250 லிட்டர் நெயினால் அபிஷேகம் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்:-

Pongal Festival at Mayuranath Temple

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1,500வருடங்கள் பழைமையான மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சிவனடியார்களால் பாடல்கள் பாடப்பட்ட சிவ ஸ்தலமாகும். இந்த ஆலயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மயூரநாதசுவாமி மற்றும் அருள்மிகு அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 24வதுஆண்டாக பொங்கல் நெய் அபிஷேகம் 15/01/2024 அதிகாலை நடைபெற்றது.

Read Also : குழந்தைகள் வரைந்த ஓவியம் ஏலத்தில்விட்டு புற்று நோயாளிகளுக்கு உதவி

Pongal Festival at Mayuranath Temple
Pongal Festival at Mayuranath Temple

கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விரதம் மேற் கொண்ட பக்தர்கள் கொடுத்த 250 லிட்டர் நெயினால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம்போன்ற பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்த மகா நெய் அபிழேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.இதை தொடர்ந்து மஹாதீபாராதனை நடைபெற்று அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்