HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

providing free helmet in Velankanni : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இரு சக்கர பேரணியை தொடங்கி வைத்து விலையில்லா தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு

providing free helmet in Velankanni
providing free helmet in Velankanni

நாகப்பட்டினத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர பேரணி நடைபெற்றது

இதையும் படிங்க : பூனையை கனவில் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா ?

நாகப்பட்டினம் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார், பேரணியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்கள், நடுதிட்டு விடுதி வழிகாட்டோர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர் வேளாங்கண்ணி பேராலய முகப்பு பகுதியில் தொடங்கிய பேரணி கடற்கரைசாலை ,பேருந்து நிலையம் ,மாதாகுளம், வேளாங்கண்ணி ஆர்ச் வழியாக சென்று சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு செருதூர் பாலத்தில் நிறைவடைந்தது

இதையும் படிங்க : INIYA NAME MEANING IN TAMIL | இனியா பெயருக்கான விளக்கம்

சாலைகளில் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் , ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் போன்றவற்றை வலியுருத்தி சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 100 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விலையில்லா ஹெல்மெட்டை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்