HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

Rajinikanth: ரஜினியின் கூலி திரைப்படத்தில் சத்யராஜின் கேரக்டர் என்ன தெரியுமா ? அவரே கூறிய தகவல்..!

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இந்த படத்தை ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது. ஜெய் பீம் மாதிரி ஒரு புரட்சிகரமான படத்தை கொடுத்த ஞானவேல் ரஜினியுடன் இணைகிறார் என்றதும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

Sathyaraj in Rajinikanth Coolie

மேலும் இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தான் உருவாகி வருவதாக தகவல் வந்துள்ளது. எனவே இப்படமும் ஜெய் பீம் மாதிரி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தை அடுத்து ரஜினி லோகேஷ் கனகராஜின் இயக்கவுள்ள கூலி என்ற திரைப்படத்தில் நடிக்கபோகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் ரிலீசாகி மாஸான வரவேற்பை பெற்றது. ரஜினி பேசும் வசனம் முதல் பின்னணி இசை வரை எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இருப்பினும் ஒரு சில கலவையான விமர்சனங்களும் வந்து கொண்டு இருந்தன.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களை போல இருக்காமல் இப்படம் முழுவதும் மாறுபட்ட வித்யாசமான படமாக அமையும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் டைட்டில் டீசரை காணும் போது இப்படம் முற்றிலும் லோகேஷின் ஸ்டைலிலேயே உருவாகும் படமாகவே இருக்கும் என்று தெரிகின்றது.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

இதெல்லாம் ஒரு புறம் இருக்கையில் இப்படத்தில் பிரபல நடிகரான சத்யராஜ் நடிக்க போவதாக கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது. ஆனால் சத்யராஜ் ரஜினியுடன்சேர்ந்து நடிப்பாரா என்ற வினாவும் ஒருபக்கம் இருந்து வருகின்றது. ஏனென்றால் ரஜினிக்கும் சத்யராஜிற்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வந்தன. எனவே தான் சத்யராஜ் ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்பட்டது.

Sathyaraj in Rajinikanth Coolie
Sathyaraj in Rajinikanth Coolie

இந்நிலையில் கூலி படத்தில் ரஜினியுடன் சேர்ந்து சத்யராஜ் நடிப்பது சந்தேகம் என சிலர் கூறிக்கொண்டிருந்த நிலையில் தற்போது கூலி படத்தில் நடிக்க இருப்பதாக சத்யராஜ் உறுதிசெய்துள்ளார். மேலும் அவர் கூலி படத்தில் ரஜினியின் நண்பராக நடிப்பதாகவும், வில்லனாக நடிக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

மேலும் ஏ.ஆர் முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கபோகும் சிக்கந்தர் படத்தில் தான் வில்லனாக நடிக்க இருப்பதாக சத்யராஜ் கூறியுள்ளார். இந்நிலையில் கடைசியாக சத்யராஜ், ரஜினியுடன் மிஸ்டர் பாரத் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் கூலி படத்தின் மூலம் சத்யராஜ் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்