selling pens young children : மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இளம் சிறார்கள் பேனா விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது , மாவட்ட நிர்வாகம் சிறார்களை பள்ளிக்கு அனுப்பி நல்வழி படுத்தவும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மயிலாடுதுறையில் சமீப காலமாக நகரப் பகுதிகளில் சிறுவர்கள் பிச்சை எடுப்பது மற்றும் கிழங்கு, பேனா உள்ளிட்டவற்றை விற்பனை செய்வது அதிகமாகி வருகிறது. இவர்களுக்கு பின்னால் பெரும் மாபியா கும்பல் உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனிடையே மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏ நிவேதா முருகன் ராஜ்குமார் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் திமுக பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : சீதை சிகரெட் பிடித்தபடி நாடகம்; பேராசிரியர் மற்றும் மாணவர்கள் கைது
அப்போது நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அங்கு அமர்ந்திருந்த பெண்களிடம் சிறுவர்கள் பேனா விற்பனை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது எல்லோரிடமும் சென்று சிறுவர்கள் பேனா விற்பனை செய்தனர். இதனை அடுத்து மாணவர்களிடம் சென்று பேசியபோது சரிவர அவர்கள் பதிலளிக்காமல் அங்கிருந்து விலகிச் சென்று விட்டனர்.
சிறுவயதில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் அனைத்து அதிகாரிகள் முன்னிலையில் அரசு நிகழ்ச்சியில் பேனா விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்த அதிகாரிகள் இதனை சரிவர கண்டுகொள்ளாத நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சிறுவர்களை மீட்டு நல்வழிப்படுத்தி அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Also Read
- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. இணைந்து அறிவித்த நட்சத்திர தம்பதி!
- கணவனின் 3 வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத கல்யாணம்!
- தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை உண்டாகும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?
- T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
- வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் தான் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ? பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை