HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.

velangai dec

Velankanni Tourist comes : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக எல்லா மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மீக தலமாக திகழ்கிறது. கீழ் திசை நாடுகளில் லூர்து நகர் என்ற பெருமையோடு அழைக்கப்படுகிறது.

Velankanni Tourist comes | சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.

கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசலிக்கா என்ற பிரம்மாண்ட கட்டிட வடிவில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஐந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் சிறப்பு வாய்ந்தது. வங்கக்கடல் அருகிலேயே இந்த பேராலயம் அமைந்துள்ளது. இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது இவ்வாறு பலவிதமான சிறப்புகள் கொண்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வருடம் தோறும் ஆங்கில புது வருடம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவிற்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள்.

Velankanni Tourist comes
Velankanni Tourist comes

இதன்படி இந்த வருடம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்திற்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் பக்தர்கள் மற்றும் பயணிகள் கூட்டம் வேளாங்கண்ணியில் அலைமோதி வருகிறது. குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயம், நடுத்திட்டு, வேளாங்கண்ணி கடற்கரை, பழைய வேளாங்கண்ணி, கடற்கரை சாலை, மாதாகுளம் என எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வேளாங்கண்ணி கடற்கரையில் குடும்பத்துடன் கடலில் இறங்கி குளித்தும், புகைப்படம் எடுத்தும் விடுமுறையை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

Read Also : முடிவளர்ச்சிக்கு உதவும் புரொட்டீன்… இதையெல்லாம் தவறாம சாப்பிடுங்க!

புத்தாண்டை முன்னிட்டு முன்பாகவே வாழ்த்து செய்திகளை பரிமாறி வருகின்றனர். இதனை தவிர மேல்மருவத்தூர் மற்றும் பழனி உள்ளிட்ட ஆலயங்களுக்கு சென்ற பக்தர்களும் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் வேளாங்கண்ணி சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு 500 போலீசார் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று எஸ்பி ஹர்ஷ்சிங் கூறினார்.

Read Also : புனித அந்தோனியார் ஆலயத்தில் 81 அடி உயர புதிய கொடி மரத்தில் கொடியேற்றம்….

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்