HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..

nbj

Viduthalai Chiruthaigal protest : மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டமானது விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் விசிக தொண்டரணி பாதுகாப்பு முதன்மை செயலாளர் பொதினிவளவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Viduthalai Chiruthaigal protest
Viduthalai Chiruthaigal protest

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் ஆகிவற்றை தேசிய பேரிடராக அறிவிப்பு செய்து தமிழக அரசு தமிழக அரசு கேட்டுக்கொண்ட ரூ. 21 ஆயிரம் கோடி நிவாரண நிதி தொகையினை வழங்க வலியுறுத்தியும் இந்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திர நடைமுறையோடு சேர்த்து வாக்குசீட்டு பெட்டி முறையையும் நடைமுறை படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர். இதில் விசிக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்றனர்.

Read Also : மாப்படுகையில் பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் நடை பயண பேரணி..

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்