HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

Vishal will never get married : இந்த ஜென்மத்துல விஷாலுக்கு கல்யாணமே நடக்காது .. எதுக்குமே லாயக்கில்லை பைல்வான் சாபம்

Vishal will never get married

Vishal will never get married : சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் வாயை திறந்து பேசினாலே ஒவ்வொருவரை பற்றியும் கழுவி கழுவி ஊத்தும் அளவிற்கு பல அந்தரங்க செயல்பாடுகளை புட்டு புட்டு வைத்து விடுவார். அந்த வகையில் நடிகரும்,நடிகர் சங்கத் தலைவருமான விஷாலை பற்றி பயில்வான் விமர்சித்திருக்கிறார்.

Vishal will never get married
Vishal will never get married

அதாவது ராதாரவி மற்றும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த பொழுது லோன் போட்டு நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி முடிக்கலாம் என்று கூறி பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தார். ஆனால் இது மிகப்பெரிய தவறு என்று விஷால் எதிர்ப்பு கருத்தை தெரிவித்து சரத்குமாருக்கு எதிராக தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.

அதன் பின் பில்டிங் கட்டும் முயற்சியில் இறங்கிய விஷால் மற்றும் நாசர் அடிக்கல் நாட்டி வேலையை தொடங்கினார்கள். ஆனால் அந்த நேரத்தில் கொரோனா நோய் வந்ததால் அந்த வேலை பாதியிலே நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் இன்று வரை அந்த பில்டிங் கட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுத்த பாடில்லை. தற்போது பில்டிங் மறுபடியும் கட்ட வேண்டுமென்றால் ஏற்கனவே கட்டிய பாதி பில்டிங்கை இடித்த பிறகு தான் கட்ட முடியுமாம்.

அதற்கு காரணம் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆனதால் கட்டிடத்தில் இருக்கும் இரும்பு கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து விட்டது. இதனால் இதை வைத்து கட்டிடத்தை தொடர்ச்சியாக கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது மறுபடியும் கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றால் பேங்க் லோன் பெற்று தான் ஆக வேண்டும் என்று விஷால் கூறி வருகிறார்.

Read Also : 70 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்…

இதைத்தான் அப்பொழுதே சரத்குமார் பேங்க் லோன் வாங்கி கட்டி முடிக்கலாம் என்று கூறினார். ஆனால் அப்பொழுது அது தவறு என்று தெரிவித்து விட்டு இதை ஒரு காரணமாக காட்டிதேர்தலில் வெற்றி பின்பு மீண்டும் அதே மாதிரி பேங்க் லோன் வாங்க வேண்டும் என்று கூறுகிறார். அது மட்டுமில்லாமல் மேற்கொண்டு இதை எப்படி முடிக்கலாம் என்ற ஒரு திட்டமும் இல்லாமல் விஷால் சுற்றிக் கொண்டு வருகிறார்.

Vishal will never get married

அத்துடன் விஜயகாந்த் இறப்பிற்கு முன் நின்னு நடிகர் சங்கத்தின் பொறுப்பாளராக எந்த ஒரு செயலிலும் பங்கேற்காமல் வீடியோ மூலம் நீலி கண்ணீர் விட்டு நடித்தார். அதே போல் நடிகர் சங்க கட்டிடத்தையும் கட்டி முடிக்கவில்லை. இதற்கு இடையில் நடிகர் சங்கத்தை கட்டிய பிறகு தான் என்னுடைய திருமணம் என்று கூறிய விஷாலுக்கு இந்த ஜென்மத்தில் திருமணமே நடக்க வாய்ப்பில்லை. ஆக மொத்தத்தில் விஷால் எதுக்குமே லாயக்கில்லை என்று பயில்வான் விஷாலுக்கு சாபத்தை கொடுத்திருக்கிறார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்