HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Thiruvavaduthurai Atheenam : மயிலாடுதுறை அடுத்த திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழாவும் பொற்கிழி மற்றும் விருதுகள் மடாதிபதி வழங்கி அருளாசி:

மயிலாதுறை மாவட்டம் மயிலாதுறை அடுத்து 14 ஆம் நூறாண்டின் பழமை வாய்ந்த சைவத்திற்கென்று புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனம் இருக்கிறது. அங்குள்ள ஆதீன பூஜா மடத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ ஞானமா நடராஜ பெருமானுக்கு அபிழேக ஆராதனை செய்யப்பட்டது.

Thiruvavaduthurai Atheenam
Thiruvavaduthurai Atheenam

இதில் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் ஸ்ரீ ஞானமா நடராஜ பெருமானுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் சமுதாய பணியை பாராட்டி சலீம் பாட்ஷாவிற்கு மனிதநேய மாமணி விருதையும், ராஜ்குமார் அவர்களுக்கு கல்விப்பணியை பாராட்டி கல்வி சேவா இரத்தினம் விருதினையும் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அவரது திருக்கரங்களால் வழங்கி பாராட்டினார்.

Read Also : பொது மக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி திடீர் சாலை மறியல்

Thiruvavaduthurai Atheenam புத்தக வெளியீட்டு விழா

அதனை தொடர்ந்து பிட்சாடனர் என்ற புத்தகத்தை அவர்கள் வெளியிட கும்பகோணம் திருகுடந்தை சிவனடியார் திருக்கூட்டத்தலைவர் கோப்பு கோ.நடராஜ செட்டியார் முதல் பிரதியினை மடாதிபதியின் திருக்கரங்களால் பெற்றுக்கொண்டார். திருமதி விஜயலட்சுமி அம்மையார் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். அவர்களும் இரண்டாவது பிரதியினை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்.இந்த நிகழ்ச்சியில் தம்பிரான் கட்டளை சுவாமிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டர்கள்.

Read Also : இரவில் நன்றாக தூங்க எளிய வழிகள்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்