HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

மாப்படுகையில் பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் நடை பயண பேரணி நடைபெற்றது.

Mappadugai Kindergarten

மயிலாடுதுறை அருகே பாலர் பூங்கா சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார். புத்தாண்டை முன்னிட்டு போதையில்லா சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் மாப்படுகை அண்ணா சிலையிலிருந்து ரயில்வே கேட் வரை நடைபெற்ற நடைபயண விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

Mappadugai Kindergarten
Mappadugai Kindergarten

Read Also : உலகின் மிக பெரிய 10 பணக்கார குடும்பங்கள் ..

மேலும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்போம் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்ப்போம். உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் எடுத்து கொண்டு பேரணியாக சென்றனர். பறை இசை முழங்க சிறுவர்கள் சிலம்பம் சுற்றியபடி முன்னால் செல்ல இந்த விழிப்புணர்வு பேரணியானது ரயில்வே கேட் பகுதியில் முடிவடைந்தது. தொடர்ந்து மாணவர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். அதற்கு முன்பாக புத்தாண்டு விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.

Read Also : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவலர்களின் பிள்ளைகளான அண்ணன், தங்கை உலக சாதனை..

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்