HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திறந்த தமிழக முதல்வர்

nulak

Nagapattinam Library : நாகப்பட்டினம் நகர பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 23 வது கூக்ஸ் சாலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடத்தினை தமிழக முதல்வர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Nagapattinam Library
Nagapattinam Library

ரூ. 2 கோடி மதிப்பில் 12852 சதுர அடி பரப்பளவில் கட்டியுள்ள இந்த மையத்தில் தற்போது 2,057 அறிவுசார் புத்தகங்கள்,இணைய வசதியுடன் 10 கணினிகள் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் வகையில் ஜெனரேட்டர் மற்றும் சோலார் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கௌதமன் நகர மன்ற தலைவர் மாரிமுத்து நகராட்சி ஆணையர் திருமால் செல்வம் போன்ற அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read Also : குளம் இதை வேறு எப்படி எல்லாம் சொல்வார்கள் உங்களுக்கு தெரியுமா?

View this post on Instagram

A post shared by V Tamil News | V தமிழ் நியூஸ் (@vtamilnews)

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்