தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். நடிகர் என்பதைகாட்டிலும் அதையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் எனபன்முகம் உள்ளவராக இருந்து வருகின்றார் தனுஷ்.
தற்போது தன் 50 ஆவது திரைப்படமான ராயன் பட த்தின் பணிகளில் தனுஷ் ஓய்வில்லாமல் இருக்கின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் தயாராகும் ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் சுருசுருப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தனுஷ் பா.பாண்டி படத்திற்கு பிறகு ராயன் படத்தில் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். ஆகவே இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் D51 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷூட்டிங்கானது ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இன்றி “Nilavukku enmel Ennadi Kobam” என்ற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஒருபுறம் இயக்கம் மறுபுறம் நடிப்பு என பிசியாக இருக்கும் தனுஷ் வடசென்னை 2 திரைப்படத்தில் எப்போது நடிப்பார் என்ற கேள்விகள் எல்லோரிடமும் இருந்து வருகின்றது. தமிழ் திரையில் வெற்றிகரமான கூட்டணியில் தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியும் ஒன்று.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் இவர்கள் இணைந்தாலே, இந்தியளவில்அந்த படம் பேசப்படும் படமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : தித்திப்பான சேமியா பாயசம் செய்வது எப்படி?
Also Read
- டிராகன் படத்தில் நடித்த நடிகை அடுத்து யாருடன் நடிக்கிறார் என்று தெரியுமா?
- 22 ஆண்டுகள் நிறைவு செய்த த்ரிஷாவிற்கு சைலண்டா சூர்யா 45 அண்ட் டீம் கொடுத்த டிரீட் !
- என்ன ஆனது சமந்தாவிற்கு? சமந்தாவைப் பார்த்து ரசிகர்கள் கவலை…
- பிக் பாஸால என் லைஃபே போச்சு-மனவேதனையில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி சொன்னது
- சிட்டிசன் படத்தில் நடித்த வசுந்தரா தாசுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை!
எனவே இவர்கள் கூட்டணியில் மேலும் ஒரு படம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்களின் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றிமாறனை பற்றி தனுஷ் பழைய பேட்டி ஒன்றில் உயர்வாக பேசிய விஷயங்கள் மீண்டும் இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
4 people cheating dhanush
அந்த பேட்டியில் தனுஷ் பேசும் போது, வாழ்க்கையில் நான் ஒரு 4 நபர்களை மிகவும் நம்பியிருந்தேன். அதில் வெற்றிமாறனும் ஒருவர்.மற்ற 3 நபர்களும் பெண்கள். வெற்றிமாறன் ஒருவர் தான் அந்த நம்பிக்கையை இந்த நாள் வரை காப்பாற்றி வருகின்றார்.
என்னதான் வெற்றிமாறன் பெரிய இயக்குனராகி இருந்தாலும்
தனுஷை விட்டுக்கொடுக்கமாட்டேன் என வெற்றிமாறன் இது நாள் இருந்து வருகின்றார். அவர் எனது நெருங்கிய நண்பர் என பேசியிருந்தார் தனுஷ்.

இவ்வாறு பல பேட்டிகளில் வெற்றிமாறனை பற்றி உயர்வாக பேசியிருக்கிறார் தனுஷ். அதே போல வெற்றிமாறனும் தனுஷின் தன்மை பற்றியும் அவரின் திறமை பற்றியும் உயர்வாக பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் வடசென்னை 2 கூடிய விரைவில் உருவாக வேண்டும் என்பது தான் தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து ஜோதிடர் சொல்லியது நடந்துடுமோ? : சினிமா ரசிகர்கள்