HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

Breaking : அரசு பேருந்தில் போலி டிக்கெட் வைத்து வசூல்.. சிக்கிய அரசு பேருந்து நடத்துனர்! Fake ticket in government bus

fake tikcket cdm salem

Fake ticket in government bus: நேற்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சேலத்தில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த அரசு ஏசி பஸ் டவுன் பஸ் போலவே ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நின்று நின்று வந்துள்ளது. பொதுவாகவே ஏசி பேருந்துகள் பாயின்ட் டு பாயின்ட் பேருந்து மற்றும் விரைவு பேருந்து ஆகியவை குறிப்பிட்ட ஒரு சில ஊர்களில் மட்டுமே நின்று செல்வது வழக்கம்.

ஆனால் இந்த அரசு ஏசி பஸ் ஒவ்வொரு கிராமமும் நின்று நின்று வந்துள்ளது இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் டிரைவரிடம் ஏன் இந்த பஸ் டவுன் பஸ் போல நின்று நின்று செல்கிறது என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அந்த டிரைவர் அப்படித்தான் செல்வேன் என்றும் யாரிடம் வேணாலும் புகார் செய்து கொள் எனவும் கூறியுள்ளார் என சொல்லப்படுகிறது.

Fake ticket in government bus
Fake ticket in government bus

Fake ticket in government bus

இதனைத் தொடர்ந்து அந்த அரசு பேருந்து விருத்தாசலத்தை அடுத்த வடலூரை வந்தடைந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து கழகத்தின் டிக்கெட் பரிசோதனை அதிகாரி பேருந்தை நிறுத்தி அதில் ஏறினர், பின்னர் பேருந்து கண்டக்டர் வைத்திருந்த டிக்கெட் களை பரிசோதனை செய்தனர். டிக்கெட்டில் உள்ள சீரியல் எண்களை வைத்து சோதித்த போது அவை அனைத்தும் போலிகள் என தெரியவந்துள்ளது

கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…

இதனை அடுத்து டிக்கெட் பரிசோதனையாளர்கள் சிதம்பரத்தில் உள்ள பெரியார் பஸ் டிப்போ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அப்பேருந்தை கைப்பற்றியனர். பின்னர் பேருந்தில் பயணம் செய்த பயனாளர்களை அவரவர் நிறுத்தங்களில் இறக்கிவிட்டு பிறகு பேருந்து காலியாகவே எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். மேலும் அந்தப் போலி டிக்கெட்களையும் பறிமுதல் செய்யப்பட்டனர் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணியிடம் சாட்சி சொல்ல வருமாறு அழைத்துள்ளனர் ஆனால் அப் பயணியோ தனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தன்னால் தற்போது வர இயலாது என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடம் ஆங்காங்கே அரசு பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றியதும் போலி டிக்கெட் விற்பனை செய்தது குறித்து அவரிடம் சாட்சியாக எழுதி வாங்கிக் கொண்டனர்

6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்