HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Mari Selvaraj : இயக்குனர் மாரி செல்வராஜ் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையதளத்தில் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமாரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

அனைத்து இடங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் மிகவும் பரிதவித்து போனார்கள். தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அனைத்தும் முழு வீச்சில் களம் கண்டது. அப்படி செய்தும் மக்களை மீட்பதில் மிகப்பெரிய சவால்களும் சிரமங்களும் ஏற்பட்டது.

Mari Selvaraj
Mari Selvaraj

Also Read : அதிமுகவுக்கு ஷாக் ! தூக்கிய பாஜக !

தண்ணீரின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள மக்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இயக்குனர் மாரி செல்வராஜ் வீடும் இந்த பகுதியில் தான் இருக்கிறது.

Mari Selvaraj வெள்ள மீட்பு பணி

அவரும் உடனடியாக தன் ஊர் மக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் மீட்பு படகுகளால் கூட செம்பூர், ஆதிநாதபுரம், பிள்ளமடையூர், கல்லம்பரை, கரையடியூர், மாநாட்டூர், மணத்தி, தேமான்குளம், குருவாட்டூர், இராஜபதி, குட்டக்கரை, குரும்பூர், தென்திருப்பேரை, மேலக்கடம்பா ஆகிய கிராமங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த எல்லா கிராமமும் குளத்திற்கும், ஆற்றிற்கும் நடுவே இருக்கிற விவசாய கிராமங்கள் என்று மாரி செலவராஜ் தெரிவித்திருந்தார்.

Watch Video : பல்லாவரத்தில் தந்தை பெரியார்திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்