HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

நாகையில் விஜய் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, தப்ஸு அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்

Nagai Vijay fans celebrated enjoyed

Nagai Vijay fans celebrated enjoyed : தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் அறிவித்ததை தொடர்ந்து நாகையில் விஜய் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, தப்ஸு அடித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்;

Nagai Vijay fans celebrated enjoyed
Nagai Vijay fans celebrated enjoyed

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு செய்து 2/02/2024 ல் அக்கட்சியின் பெயரை வெளியிட்டார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் 2/02/2024 ல் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்யுடன் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக 2/02/2024 ல் நாகப்பட்டினத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சுகுமாரன் தலைமையில் ஏராளமான ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, தப்ஸ் மேளம் அடித்து ஊர்வலமாக வந்தனர்

Also Read : கட்சிக்கு இந்தப்பெயர் வைப்பதற்கு காரணம்? நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதியை தேர்வு செய்யக் காரணம்?

அதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு மற்றும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கட்சி தொடங்கியதை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது விஜயின் புதிய கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் வாழ்க என அவரது ரசிகர்கள் கோஷங்களை எழுப்பியும், நடிகர் விஜயின் புகழ் தமிழகம் எங்கும் ஓங்கட்டும் என முழக்கமிட்டார்கள்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்