HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

சாதியை கூறி திட்டி தாக்கியதாக காவல் நிலைத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

nadavil

No action was taken despite filing a complaint : கூலி வேலைக்கு அழைத்து சென்று சாதியை குறிப்பிட்டு திட்டி தாக்கியதாக காவல் நிலைத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சாலை மறியல்-ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

No action was taken despite filing a complaint
No action was taken despite filing a complaint

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நடராஜபுரத்தில் வசித்து வரும் சுதாகர் (வயது 56)இவரை உத்தண்டராயபுரத்தில் வசிக்கின்ற தமிழ்வாணன் என்ற கொத்தனார் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு அவரை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

பின் சுதாகரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி செய்து விட்டு அவரது வீட்டில் விட்டுவிட்டார் தமிழ்வானன் பின்னர் அன்று மாலை சுதாகருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் அவரது மனைவி தமிழரசி தாக்கியதாக கூறப்படும் தமிழ்வானன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.

No action was taken despite filing a complaint

ஆனால் தமிழ்வாணன் அவர் சரியாக பதில் கூறவில்லை. இதனால் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2 முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க்கவில்லை. 20/01/2024 லில் மயிலாடுதுறையில் இருந்து பட்டவர்த்தி செல்லும் சாலையில் அந்த பகுதி மக்கள் சாலைமறியல் செய்தனர்.இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read Also : மயிலாடுதுறை அருகே 14 வருடங்களுக்குப் பிறகு கீழ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

பின் மணல்மேடு காவல் ஆய்வாளர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு வந்து போராட்டகாரர்களிடம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என கூறினார். அதன் பின் சாலைமறியல் கைவிடப்பட்டது.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்