Student Dead in School: அரசு பள்ளி வளாகத்தில் 9 ஆம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் வகுப்பறை வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தும் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன் இவருக்கு மாரிமுத்து என்ற 14 வயது மகன் உள்ளார். இந்த மாணவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தப் பள்ளி பெருங்காடு பகுதியில் உள்ளது.
மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு ( Student Dead in School )
இந்த நிலையில் நேற்று மாலை அப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்று உள்ளது, அதில் பங்கேற்று விட்டு வீடு திரும்புவதற்காக பள்ளியின் மேல் மாடியில் உள்ள தனது புத்தகப் பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்குவதற்காக ஓடி வந்த சிறுவன் படிக்கட்டு அருகே மயங்கி விழுந்து உள்ளார்.
இதனைப் பார்த்த சக மாணவர்கள் ஓடி வந்து மாரிமுத்துவை எழுப்ப முயன்றுள்ளனர் ஆனால் மாரிமுத்து எழாததால் பள்ளி ஆசிரியரிடம் தகவல் அளித்துள்ளனர். இதனை அறிந்து உடனடியாக கீழே விழுந்து கிடந்த மாரிமுத்துவை தூக்கிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
Also Read
- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. இணைந்து அறிவித்த நட்சத்திர தம்பதி!
- கணவனின் 3 வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத கல்யாணம்!
- தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை உண்டாகும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?
- T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
- வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் தான் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ? பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்ற மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதனை அறிந்து சக மாணவர்களும் குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து ஆவடியூர் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் மாணவனின் இறப்பிற்கு சந்தேகம் இருப்பதாக கூறினார்கள் பெற்றோர்கள். காவல்துறையினர் உயிரிழந்த மாரிமுத்துவின் உறவினரை அழைத்து பள்ளிக்கு சென்றனர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அவர்களுக்கு காண்பித்தனர்.
அந்த சிசிடிவி காட்சியில் மாணவன் மேல் மாடியில் பையை எடுத்துக்கொண்டு ஓடி வருவதும், பிறகு படிக்கட்டு அருகில் மாணவனுக்கு மயக்கம் ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் காட்சிகளும், பிறகு சக மாணவர்கள் ஓடி வந்து அவரை எழுப்பும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து மாணவர்களின் உறவினர்கள் சமாதானம் ஆகினர்.
இந்த நிலையில் தற்போது உயிரிழந்த மாணவன் மாரிமுத்துவின் உடன் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கல்வித்துறை அலுவலர்களும் மற்றும் காவல் துறையினரும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி முடிந்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட நிலையில் பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…மீறினா என்ன நடக்கும் தெரியுமா?