HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

கோமாவில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய வடிவேலு.. செம நெகிழ்ச்சி சம்பவம் குறித்து தெரியுமா?

Vadivelu saved the comatose girl

வடிவேலு கோலிவுட்டின் நகைச்சுவை சூப்பர் ஸ்டார். பல ஆண்டுகளாக நடித்து மக்களை சிரிக்க வைத்த அவர்; கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்து அழவும் வைத்தார். அடுத்ததாக மாரீசன் படத்தில் நடித்து முடித்துள்ளார். நிச்சயம் இந்தப் படமும் வடிவேலுவுக்கு மிகச்சிறந்த பெயரை வாங்கி கொடுக்கும் என்று வைகைப்புயலின் ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் ஒரு சிறுமி வடிவேலுவால் பிழைத்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vadivelu saved the comatose girl
Vadivelu saved the comatose girl

காமெடியில் தவிர்க்க முடியாத நடிகர் வடிவேலு. அவர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே கலாய்த்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வல்லவர். இதனாலேயே அவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகுகிறது. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற எந்த பாரபட்சமும் பார்க்காமல் அனைவருடனும் இணைந்து நடித்து அதகளம் செய்தார்.

வடிவேலுவின் கேரியர் உச்சத்தில் இருந்தசமயத்தில் அரசியல் மேடையில் ஏறினார். அவர் என்று அரசியல் மேடையில் ஏறினாரோ அன்றிலிருந்து அவரது கரியர் சரிய தொடங்கியது. ஒருகட்டத்தில் தயாரிப்பாளர்கள் வடிவேலுவை வைத்து படம் எடுப்பதையே தவிர்த்தனர். இதனால் திரைத்துறையிலிருந்து விலகும் சூழலுக்கு தள்ளப்பட்டார் வடிவேலு. அதுமட்டுமில்லாமல், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் பஞ்சாயத்தும் சேர்ந்துகொண்டது. இதனால் அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

Read Also : வீட்டில் ஒரு முறை குடைமிளகாய் சென்னா மசாலாவை செய்து பாருங்கள் !

ஒருவழியாக வடிவேலுவுக்கு உள்ள பஞ்சாயத்துகள் பேசி சரி செய்யப்பட்டது. மீண்டும் அவர் சினிமாக்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பயங்கர தோல்வியடைந்தது. இந்தப் படம் தவிர்த்து மாரி செல்வராஜின் மாமன்னன், பி.வாசுவின் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தார். இவற்றில் மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது, இந்த படம் வடிவேலுவுக்கு தரமான ரீ என்ட்ரியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாக்களில் மீண்டும் நடிக்க வடிவேலு வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். இருந்தபோதிலும் அவ்வப்போது வந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை தந்தது. அதாவது அவருடன் நடித்த பல நடிகர்கள் வடிவேலு தங்களை வளர விடவில்லை என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். அதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் வடிவேலுவின் மற்றொரு முகமா என்று அதிர்ச்சியுடன் கேட்க ஆரம்பித்தனர். இருந்தாலும் மற்றவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் பற்றி வடிவேலு பெரிதாக ரியாக்ட் செய்துகொள்வதில்லை.

Vadivelu saved the comatose girl
Vadivelu saved the comatose girl

இப்போது ஃபகத் பாசிலும் மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் வடிவேலு. இந்தச் சூழலில் வடிவேலுவால் ஒரு சிறுமி உயிர் பிழைத்த நிகழ்ச்சி தெரியவந்திருக்கிறது. அதாவது ஒருமுறை 11 வயது சிறுமி கோமா நிலைக்கு சென்றுவிட்டாராம். அப்பொழுது அந்த சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவர், ‘உங்கள் மகளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், வடிவேலுவின் நகைசுவை பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

Vadivelu saved the comatose girl

பிழைத்த சிறுமி: உடனே அவர்களிடம் மருத்துவர், சரி வடிவேலுவின் காமெடிகளை போட்டுக் காண்பித்துக்கொண்டே இருங்கள் என்று சொல்லியிருக்கிறார். பெற்றோரும் அதன்படியே செய்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த சிறுமி கோமா நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டாராம். இதனை வடிவேலுவே சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்