HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

Breaking Vellore Airport : வேலூரில் புதிய விமான சேவை… இனி பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வெறும் 4 மணி நேரந்தான் !

Vellore Airport : தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை போல வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உதான் என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் விமான சேவையை தொடங்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு விமானம் அமைக்கும் பணிக்காக சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

Vellore Airport
Vellore Airport

வேலூரில் புதிய விமான சேவை | Vellore Airport

இந்த நிலையில் விமான சேவை பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வேலூர் விமான சேவை இயக்கத்தில் விமானம் இயங்க அனுமதி கிடைத்துவிட்டால், சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு செல்ல 4 மணி நேரம் மட்டும்தான் ஆகும். இங்கு இயங்க படும் விமானங்களில் 19 முதல் 78 நபர்கள் அமரும் அளவிற்கு இருக்கைகள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு விமானசேவை மிக விரைவில் தொடங்கப்படவுள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து உதான் திட்டத்தின் அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் விமான சேவையை தொடங்க உள்ளதாக ஏர் டாக்ஸி நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், நெய்வேலியிலிருந்து சென்னைக்கு சிறு ரக விமான சேவை துவங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. அது நம் மாநிலத்திற்கு வளர்ச்சியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Watch : ‘படிப்புக்கு மரியாதை’… அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்