HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

ஓட்டுரிமை இருந்தும் ஏன் 1000 ரூபாய் உரிமைத்தொகை எனக்கு கொடுக்கல.? ஸ்டாலினிடம் பெண் வாக்குவாதம்

woman-arguing-with-stalin

நடைபயிற்சி செய்து கொண்டு வாக்கு சேகரிக்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலினிடம், ஓட்டுரிமை இருக்கும் எனக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்காதது ஏன் என பெண் ஒருவர் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

woman-arguing-with-stalin
Woman arguing with Stalin

தீவிர பிரச்சாரத்தில் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரதில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு சின்னிம்பாளைம் பகுதியில் 31/3/24 லில் மாலை நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஈரோடு, கரூர், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இதையும் படிங்க : காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி..?

இதற்காக 30/03/2024 லில் சேலம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு ஈரோட்டில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினார். இதனிடையே31/03/2024 காலை சம்பத்நகர் பகுதியில் இருக்கும் உழவர்சந்தை பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சியை தொடங்கினர். அப்போது நடைபயிற்சி செய்து கொண்டுள்ள பொதுமக்களிடம் நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வாக்குகள் சேகரித்தார்.

காலையிலேயே வாக்கு சேகரித்த ஸ்டாலின்

மேலும் உழவர் சந்தையில் இயங்கி வரும் 120 பது கடைகளில் வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலையை கேட்டும் பின் வாக்குகள் சேகரித்தார். மேலும் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.அப்போது பெண்கள், குழந்தைகள் முதல்வர் ஸ்டாலின் கை குலுக்கியும் , செல்பியும் எடுத்து கொண்டனர். இதனிடையே உழவர்சந்தை அருகே உள்ள நடைபாதை வியாபாரிகளிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வாக்குகள் சேகரித்தார்.அந்த சமயத்தில் தூய்மை பணியாளர் மூர்த்தி என்பவரின் மனைவியான காய்கறி வியாபாரி விஜயா என்பவர் 2 முறை கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் செய்தும், விண்ணப்பம் நிராகரிப்பட்டு விட்டதாகவும் முறையிட்டார்.

மகளிர் உரிமை தொகை | Woman arguing with Stalin

ஓட்டுரிமை இருக்கும் எனக்கு மகளிர் உரிமை தொகை பெற தகுதியில்லை என்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர். ஆயிரம் ரூபாய் கூட வாங்க உனக்கு தகுதியில்லை என வீட்டில் திட்டுவதாகவும் ஸ்டாலினிடம் முறையிட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் இது தப்பு மா என சொல்லிவிட்டு அந்தப்பகுதியிலிருந்து சென்றார். முதல்வர் ஸ்டாலினிடம் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெண் ஒருவர் நேரடியாக முறையிட்ட நிகழ்ச்சி ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : நோபல் பரிசு முதலில் பெற்ற தமிழர் யார் தெரியுமா..?

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்