நாட்டாமை திரைப்படத்தில் மிக்சர் சாப்பிடும் காமெடியின் மூலம் பிரபலமான நடிகர் யார் என்ற செய்தியை இத்தனை வருடங்களுக்குப் பிறகு கே. எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Mixture comedy natama movie details

நாட்டாமை காமெடி
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இடம்பெற்ற மிக்சர் காமெடியை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
மிக்சர் மாமா
கவுண்டமணியின் கல்யாண கனவை கலைத்துவிடும் செந்திலை கவுண்டமணி அனைவரது முன்னிலையிலும் அடிக்க செல்வார். ஆனால் அப்போதும் அங்கிருப்பவர் அசையாமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். இவ்வளவு அமுளி துமுளி நடந்துகிட்டு இருக்கும்போது, அப்பவும் இவன் மிக்சர் சாப்பிட்டுட்டு இருக்கான் யார் இவன் என்று கவுண்டமணி அங்குள்ளவர்களிடம் நக்கலாக கேட்பார்.
மீம் மெட்டீரியல்
பின்னாளில் இது மிகப்பெரிய அளவில் மீம் மெட்டீரியல் ஆனது. எவ்வளவு கலவரம் வந்தாலும் எதுவும் பேசாமல் சும்மா உள்ளவர்களை கலாய்க்கும் வகையில் இந்த மீம் டெம்ப்ளேட்டை பலரும் உபயோகப்படுத்தி வருகிறார்கள்.
யார் இவர்?
இந்த நிலையில் இந்த சீனில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நடிகர் யார் என்ற தகவலை இத்தனை வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். அதாவது இவர் சினிமாவில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளாராம்.
கடுப்பான கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார் 6 வது லைட்டை போடு என்றால் அந்த ஸ்விட்சை ஆன் செய்வாராம் பின் 7 வது லைட்டை போடு என்றால் அந்த ஸ்விட்சை ஆன் செய்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொள்வாராம். இதை பல நாட்கள் பார்த்து கொண்டிருந்த கே.எஸ்.ரவிக்குமார் ஏன் இந்த வேலைய மட்டும் தான் செய்வியா அந்த லைட்டை சரி செய்லாம்ல என கேட்டிருக்கிறார்.
அது என் வேலை இல்லை
அதற்கு அவர், அது என் வேலை கிடையாது.. என் வேலை லைட் போடுவது மட்டும்தான் என பதில் சொல்லியுள்ளார். இதை அப்படியே மைண்டில் வைத்திருந்த கே.எஸ்.ரவிக்குமாருக்கு நாட்டாமை படத்தில் இப்படி ஒரு சீன் படமாக்கும்போது இந்த ரோலில் அவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரை அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு அந்த காமெடி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது .
நன்றி கூறிய நடிகர்
நாட்டாமை படம் ரிலீஸ் ஆகி அந்த காமெடி மிகுந்த வரவேற்பை பெற்றதும் கே.எஸ்.ரவிக்குமாரை தேடி தாம்பூல தட்டுடன் வீட்டுக்கு சென்று அந்த நடிகர் நன்றி கூறி விட்டு சென்றாராம். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு படுத்தி கே.எஸ்.ரவிக்குமார் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க



