Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

`ஏ புள்ள முத்தழகு… கலக்குற போ’ – பிரியாமணி சம்பவங்கள்!

‘பருத்திவீரன்’ படப்பிடிப்பு மதுரை பக்கம் ஒரு கிராமத்துல நடந்துக்கிட்டிருக்கு. படத்துல பாத்தீங்கன்னா ஊரோரம் புளியமரம் பாட்டும் அதோட தொடர்ச்சியா வர்ற கார்த்தி – பிரியாமணி கான்வர்சேசன் காட்சியும்…

‘பருத்திவீரன்’ படப்பிடிப்பு மதுரை பக்கம் ஒரு கிராமத்துல நடந்துக்கிட்டிருக்கு. படத்துல பாத்தீங்கன்னா ஊரோரம் புளியமரம் பாட்டும் அதோட தொடர்ச்சியா வர்ற கார்த்தி – பிரியாமணி கான்வர்சேசன் காட்சியும் டாப் லைட்லதான் படமாக்கப்பட்டிருக்கும். இதுக்காக கிட்டத்தட்ட தொடர்ந்து பத்து நாளுக்கு மேல..

தினமும் காலையில 11 மணியிலேர்ந்து மதியம் 3 மணி வரைக்கும் இடைவேளை இல்லாம படப்பிடிப்பை நடத்திக்கிட்டு வர்றாரு படத்தோட டைரக்டர் அமீர். அதுக்குக் காரணம் அந்த நேரத்தில மட்டும்தான் டாப் லைட் கிடைக்கும். அப்படி அந்த சீன் ஷூட் செய்து கிட்டிருக்கும்போது ஒரு நாள் டைரக்டர் அமீர் பிரியாமணியிடம், ‘கார்த்தி உங்கள அறையும்போது அப்படியே அடி வாங்கி இந்த தண்ணியில விழுந்துடுங்கன்னு’ கூறி ஒரு சின்ன குட்டையைக் காட்டுறாரு. அவர் காட்டிய இடத்தைப் பாத்தா, குட்டை முழுசும் அழுக்கான தண்ணி, குப்பை, நிறைய பூச்சின்னு பாக்கிறதுக்கு அறுவெறுப்பா இருக்கு.

Priyamani incidents
Priyamani incidents

அப்போ மணி சரியா 2. ஒருபக்கம் பிரியாமணிக்கு நல்ல பசியில இருக்காங்க . ஆனா இந்த சங்கடம் எதையும் வெளியே காட்டிக்காம ‘பண்ணிடலாம் சார்’ னு கூலா கூறிவிட்டு அந்த ஷாட்ல நடிக்கப்போனாங்க. அமீர் சொன்னது போலவே கார்த்திகிட்ட அறை வாங்கி பொத்துன்னு அந்த குட்டையில விழுந்து எந்திரிச்சாங்க. இப்படி ஒரு முறை ரெண்டு முறை இல்ல, அந்த டேக் ஓகே ஆகுற வரைக்கும் பல தடவ விழுந்து எந்திரிச்சாங்க. அப்படி ஒரு சின்சியர் ப்ளஸ் டேலண்டான ஆர்டிஸ்ட்தான் பிரியாமணி. அதோட விளைவு இங்க அடிச்ச அடி ஒன்றிய அரசுக்கு அந்த அடியின் சத்தம் கேட்டு டெல்லிக்கே அழைச்சி அவருக்கு தேசிய விருது தந்துச்சு.

இப்படி ஒரே படம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே யாருப்பா இந்த பொண்ணுன்னு திரும்பி பாக்க வெச்ச பிரியாமணி அதுக்கப்புறம் தமிழ் சினிமாவுல நிச்சயம் ஒரு பெரிய அளவுல வந்திருப்பாங்கன்னுதான நினைக்கிறீங்க அது தான் இல்லை. அப்படியொரு இண்டஸ்ட்ரி வெற்றி படத்துல நடிச்சத்துக்கப்புறமும் பிரியாமணியால தமிழ்ல ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியாம போச்சு. ஆனா அதே நேரம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகள்ல பீக்குக்குப்போனாங்க. பருத்திவீரனுக்கு முன்னாடி பிரியாமணி கரியர்ல என்ன நடந்தது அதுக்கப்புறம் என்ன நடந்தது. அது அனைத்தையும்விட தனக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த பருத்திவீரன் படமும் இயக்குநர் அமீரையும், அதுக்கப்புறம் பிரியாமணி ஏன் கடுமையா விமர்சனம் பண்ணினாங்ககிறதையெல்லாம் இப்போ நாம பாக்கலாம்.

Priyamani incidents

Priyamani incidents
Priyamani incidents – Priyamani incidents – Priyamani incidents

பெங்களூர்ல பிறந்தார் பிரியாமணி, இவங்க குடும்பம் மலையாள வம்சாவளியைச் சேர்ந்தது. இவங்க குடும்பமே கலைத்துறையைச் சார்ந்தவங்கதான். இவங்க பாட்டி கமலா கைலாஷ்ங்கிறவங்க கர்நாட்டிக் பாடகரா இருந்திருக்காங்க. பாலிவுட் ஹீரோயின் வித்யா பாலன், பாடகி மால்குடி சுபாலாம் ஒருவகையில இவங்களுக்கு உறவு தான். இதனால பள்ளியில படிக்கும்போதே பிரியாமணி மாடலிங் செய்ய ஆரம்பிச்சாங்க. குறிப்பா நிறைய புடவைகள் சம்பந்தமான ஆட்ஸ் இவங்களைத் தேடி வர தொடங்கிச்சுது. அதுக்கு முக்கியமான காரணம் பிரியாமணியோட பாந்தமான முகமே 2003-ல பாரதிராஜா ‘கண்களால் கைது செய்’ அப்படிங்கிற படத்தை புதுமுகங்களை வெச்சு டைரக்ட் செய்யனும்னு முடிவு செய்றாரு.

அதுக்கு ஹீரோயினா நிறைய மாடல்ஸை வரவெச்சு ஆடிசன் செஞ்சி பாக்குறாரு. அதுல ஒருத்தரா பாரதிராஜா அலுவலகத்துக்கு வந்தாங்க பிரியாமணி. அப்போ… மோஸ்ட் சீனியர் இயக்குனரான பாரதிராஜாவைப் பாத்து எந்த பயமும் இல்லாம இன்னும் சொல்லணுன்னா கொஞ்சம் கெத்தாவே பேசியிருக்காங்க பிரியாமணி. அந்த கெத்தைப் பாத்து பிடிச்சுப் போய்தான் இந்தப் பொண்ணுதான் நம்ம படத்தோட ஹீரோயின்னு முடிவு செஞ்சிருக்காரு பாரதிராஜா.

Priyamani incidents
Priyamani incidents

முதல் படமே பாரதிராஜா படம்னு கரியர்ல ஆரம்பம் ஆனாலும் அந்தப் படத்தோட படப்பிடிப்பு தள்ளிக்கிட்டேப் போக ஆரம்பிச்சுது, இதுக்கு மத்தியில பிரியாமணிக்கு தெலுங்குல‘எவரே ஆட்டக்காடு’ அப்படிங்குற படம் கிடைச்சுது அந்தப் படமும் 2003 ம் ஆண்டுல ரிலீஸ் ஆச்சு. அந்தப் படம் ரிலீஸ் ஆகி மறுவருசம்தான் பாரதிராஜா இயக்கத்துல நடிச்ச ‘கண்களால் கைது செய்’ படமே ரிலீஸ் ஆச்சு. அந்தப் படம் பெரிய ஃப்ளாப் ஆச்சு இருந்தாலும் பிரியாமணி தன்னோட களையான திராவிட முக அழகாலேயும் நடிப்பாலயும் வசீகர நடன அசைவுகள் மூலமாவும் கொஞ்சமாச்சம் கவனத்த ஈர்த்திருந்தாங்க.

தொடர்ந்து தன்னோட படங்கள்ல டஸ்கி ஸ்கின் டோன் கதாநாயகிகள மட்டுமே பயன்படுத்தி கொண்ட இயக்குநர் பாலுமகேந்திரா கண்ணுல இந்த டஸ்கி ப்யூட்டி பட்டுச்சி. பாலுமகேந்திரா அவரோட இயக்கத்துல தனுஷுக்கு இணையா ‘அது ஒரு கனா காலம்’ படத்துல பிரியாமணியை நடிக்க வெச்சாரு. ஆனா அந்தப் படமும் பாக்ஸ் ஆஃபிஸ்ல பெருத்த அடிவாங்குச்சு… என்னதான் இப்படி பாரதிராஜா, பாலுமகேந்திரான்னு பிரியாமணியோட கரியர் துவங்கினாலும்.. அந்தப் படங்கள்ல பிரியாமணி தன்னோட பங்களிப்பை நல்லபடியா கொடுத்திருந்தாலும் அந்த 2 படங்களுமே மிகப்பெரிய ப்ளாப் ஆனதால இவங்க ஒரு சிறந்த நடிகை அப்படிங்கிற விஷயம் இண்டஸ்ட்ரில உள்ளவங்களுக்கே சரியா தெரியாதபடி தான் இருந்துச்சு.

Priyamani incidents
Priyamani incidents

அந்த நேரத்துலதான் அமீரோட இயக்கத்துல பருத்திவீரன் படத்துல கமிட் ஆகுறாங்க பிரியாமணி. 2007-ல ரிலீசான அந்தப் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிச்சி தென்னிந்தியாவையே திரும்பிபாக்க செஞ்சிச்சு. அந்தப் படத்துல அவங்களோட நடிப்பு எப்படி இருந்துச்சுன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேணாம். ஆனா அப்போத்தைக்கு பிரியாமணிக்கு இருந்த புரிஞ்சுகிறதுல குறைபாடா இல்ல வேற எதாவது காரணமா தெரியலை, பருத்திவீரன் வெளியானதுக்கு அப்புறம் பிரியாமணி தொடர்ந்து அமீரை விமர்சனம் செய்ய ஆரம்பிச்சாங்க.

பதிலுக்கு அமீரும் பிரியாமணியை விமர்சனம் செய்ய ஆரம்பிச்சாரு. அந்த நேரத்துல பருத்திவீரன்ல நடிச்சதுக்காக பிரியாமணிக்கு தேசிய விருது அறிவிப்பானதும், இந்த விருதை இயக்குநர் அமீருக்கு சமர்ப்பிக்கிறேன்னு சொல்லி அப்போதைக்கு அந்த பிரச்சைனையை ஆஃப் செஞ்சாங்க பிரியாமணி. ஆனாலும் பின்னாடி அமீர் யோகி படத்துல ஹீரோவா அறிமுகமான போது அவருக்கு இணையா நடிக்க பிரியாமணியையைக் கேட்டப்போ ஏனோ அவங்க நடிக்க முடியாதுன்னுட்டாங்க.

பருத்திவிரன் பெரிய ஹிட் பெற்று மிகப்பெரிய ஃபேமை தந்தாலும் அந்தப் படம் நடிச்சுக்கிட்டிருந்த போதே தெலுங்குல டிபிக்கல் கிளாமர் ஹீரோயின் கேரக்டர்ல பிரியாமணி கமிட் ஆகியிருந்த ‘எமதொங்கா’ போன்ற படங்கள் அடுத்தடுத்து அங்க ரிலீஸ் ஆகி சக்ஸஸ் ஆக தொடங்கிச்சு. இதனாலயோ என்னவோ பருத்திவீரன் மூலமா கிடைச்ச ஃபேமை உபயோகித்து தமிழ்லயும் முதல் தர ஹீரோயினா ஆகனும்னு விஜய், அஜித்துக்கு இணையா நடிக்கனும்னு முடிவு செஞ்சி உச்சபட்ச கிளாமர் அப்படிங்கிற ரூட்ல முடிவு எடுத்தாங்க பிரியாமணி. பருத்திவீரன் ஹிட்டுக்கு பெறகு அடுத்து பிரியாமணி என்ன மாதிரியான படத்துல வரப்போறாங்கன்னு தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தப்போ, அப்போ பரபரப்பா வந்துக்கிட்டிருந்த விஷாலுக்கு பேரா அவங்க கமிட் ஆன ‘மலைக்கோட்டை’ படத்துல அளவுக்கு மேல க்ளாமர் காட்டி நடிச்சாங்க.

Priyamani incidents
Priyamani incidents

ஆனா பருத்திவீரன் படத்துல முத்தழகா பாத்து ரசிச்ச பிரியாமணியை கிளாமர் அழகா பாக்க தமிழ்நாட்டு மக்களுக்கு மனசு வரலைன்னு சொல்லவேனும். போதாக்குறைக்கு பருத்திவீரன் போல ஒரு எக்ஸ்ட்ரானரி ஃபர்ஃபாமான்ஸ் செஞ்ச அவங்களை பாத்துட்டு, இப்படி கதையில எந்த முக்கியத்துவமும் இல்லாம சும்மாலுமே கிளாமர் காட்டி டான்ஸ் ஆடிட்டு போகுற ஹீரோயினா வந்ததை தமிழ் சினிமா ரசிகர்களால ஏத்துகிட முடியலை. மலைக்கோட்டைக்கு அடுத்ததா பருத்திவீரனுக்கு முன்னாலேயே பிரியாமணி கமிட் ஆகியிருந்த தோட்டா படத்துலயும் ஜீவனுக்கு நாயகியா வெறும் கிளாமர் டாலா வந்ததும் அவங்க சார்மிங்கை மேலும் குறைச்சுச்சு.

அடுத்தடுத்து பிரியாமணி.. நடிப்புக்கு முக்கிய பங்கு இல்லாம நடிச்ச ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள், மக்கள் மனசுல இவங்க கிட்ட இருந்த அபிமானத்தை மேலும் குறைக்க தொடங்கிச்சு. ஆனா இதெல்லாமும் தமிழ்ல மட்டும்தான் நடந்துச்சு. எந்த கிளாமர் ரூட் தமிழ்ல ஒர்க் அவுட் ஆகம போச்சோ அந்த கிளாமர் ரூட் தெலுங்கு, கன்னட மொழிகள்ல அவங்களுக்கு நல்லாவே ஒர்க் அவுட் ஆனது. தொடர்ந்து அது போன்ற ரோல்கள்லயே நடிச்சாங்க. பிரியாமணி தெலுங்கு துரோனா படத்தில் நடிச்ச பிகினி சீன்ஸை பாத்து தெலுங்கு ரசிகர்கள் வாயடைச்சு நின்னுச்சுன்னு தான் சொல்லனும்.

Priyamani incidents
Priyamani incidents

இந்த டைம்லதான் மணிரத்னம் டைரக்ட் பண்ணின ராவணன் படத்துல விக்ரம் தங்கையா பிரியாமணி கமிட் ஆகுறாங்க.அதேபோல ஹிந்தி வெர்சன்லயும் அபிஷேக் பச்சனுக்கு தங்கச்சியா நடிச்சாங்க பிரியாமணி. ரெண்டு மொழிகளிலேயும் இந்தப் படம் சரியா போகலை இருந்தாலும் இந்தப் படம்தான் பிரியாமணிக்கு ஹிந்தி மார்க்கெட்ல ஒரு வெளிச்சத்தை கொடுதுச்சு. அதே ஆண்டுல ராம் கோபால் வர்மா இயக்கத்துல சூர்யாவோடு பிரியாமணி நடிச்சு தமிழ், ஹிந்தி லாங்குவேஜ்கள்ல வந்த ரத்த சரிக்த்ரா படம் மூலமாவும் அவங்களுக்கு ஹிந்தியில ஒரு நல்ல மைலேஜ் வந்துச்சு.

அதனாலயே ஷாருக்கானோட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துல ஐட்டம் பாட்டுக்கு ஆடுற வாய்ப்பும் பிரியாமணியைத் தேடி கொடுதுச்சு. இந்த காலகட்டத்துலலாம் பிரியாமணிக்கு தமிழ் மேலும் தெலுங்குல பட வாய்ப்புகள் குறைஞ்சுச்சுன்னாலும் கன்னட படத்துல நம்பர் ஒன் ஹீரோயினா புனித் ராஜ்குமார், கிச்சா சுதீப் ஆகிய கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்களோட படங்கள்ல தொடர்ந்து நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. கிட்டத்தட்ட 2015,16 வரையில அங்க அவங்க தான் முன்னணி கதாநாயகியா நடிச்சுக்கிட்டு இருந்தாங்க .

இங்க தமிழ்ல வந்த காஞ்சனா-2 படம் மற்றும் கன்னடத்துல கல்பனா 2 னு ரீமேக் ஆனப்போ இங்க தமிழ்ல நித்யா மேனன் நடிச்ச கேரக்டர்லேயும் இங்க கொடி படத்துல திரிஷா நடிச்ச கேரக்டர்லேயும் அங்க பிரியாமனிதான் செஞ்சாங்கன்னா பாத்துக்கோங்களேன். இன்னும் சொல்லப்போனோம்னா இங்க நயன்தாரா எடுத்த ரூட் போலவே ஒரு கட்டத்துக்குமேல பிரியாமணி மலையாளத்துலயும், கன்னடத்துலயும் பல ஹீரோயின் ஓரியண்டட் படங்கள்ல நடிக்க தொடங்கினாங்க.

இந்த நேரத்துலதான் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை பிரியாமணி லைஃப்ல வந்துச்சு. அதுதான் ஃபேமிலிமேன் வெப்தொடர். 2019-ல வெளியான இந்த தொடரோட ரீச்சும் இந்த சீரிஸ்ல பிரியாமணி கொடுத்த டேரிங்கான நடிப்பும் பிரியாமணிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்து மீண்டும் இந்தியா முழுக்க பேசப்பட்டுற ஒரு நபரா அவங்களை மாத்துச்சு. தொடர்ந்து ஹிந்தியில அடுத்தடுத்து வந்த ‘அடீட்’ ‘ஹிஸ் ஸ்டோரி’ போன்ற ஓடிடி வெளியீடுகளும் பிரியாமணியின் நடிப்புத்திறமையை இந்தியா முழுக்க இன்னும் மேலும் கொண்டுபோய் சேர்த்துச்சு.

Priyamani incidents
Priyamani incidents

ஆனா என்னதான் பிரியாமணி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம்னு பிற லாங்வேஜ்கள்ல தொடர்ந்து அசத்தி வந்தாலும் தமிழ்ல என்னவோ அவங்களுக்கு பருத்திவீரனுக்கு பொறவு பெருசா கிளிக் ஆகலைனுதான் சொல்ல வேனும். ஒருவேளை பருத்திவீரனுக்கு அப்புறம் அவங்க நடிகை அஞ்சலி போல நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்ல நடிச்சிருந்தாலோ இல்ல நயன்தாரா போல ஹீரோயின் ஓரியண்டன்ட் படங்கள்ல நடிச்சிருந்தாலோ அந்த குறை விலகியிருக்கலாம். இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போவல, இனி வர்ர காலத்துலயேயாவது அந்தக் குறை போக வாய்ப்பிருக்கு

சரி சரி நீங்க சொல்லுங்க.. பிரியாமணி நடிச்ச பருத்திவீரன் படம் நம்ம அனைவருக்குமே பிடிச்ச படம்தான். ஆனா அந்த படம் தவிர்த்து அவங்க நடிச்ச படத்துல நீங்க மிகவும் ரசிச்ச படம் எது.. இனிமே அவங்க தமிழ்ல நடிக்குறப்போ எது போன்ற கேரக்டர்கள் செஞ்சா நல்லாயிருக்கும்னு உங்களுக்கு ஆசை இருக்குன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

இதையும் படிங்க : கோமாவில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய வடிவேலு.. செம நெகிழ்ச்சி சம்பவம் குறித்து தெரியுமா?

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க