HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

ஜோதிகாவின் இளமையின் ரகசியம்…வெறித்தனமான மிரட்டல் வொர்க் அவுட் ரகசியம் இதுதானா.!

Jyothikas secret of youth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு இருக்கிறார். மற்றொரு புறம் தனது பிட்னஸிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். இந்நிலையில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ஜோதிகாவின் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் வைரலாகி வருகிறது.

Jyothika’s secret of youth

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்த ஜோதிகா, திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே சூர்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இதனையடுத்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது ஜோதிகா மீண்டும் தனது 2 ஆவது இன்னிங்ஸில் கலக்கி கொண்டுள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘காதல் தி கோர்’ படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரையும் வியக்க வைத்தார் ஜோதிகா. ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளரின் மனைவியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சகர்கள் இடையே ‘காதல் தி கோர்’ படம்.ஏகோபித்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

Jyothika’s secret of youth

Jyothika’s secret of youth

ஒருப்பக்கம் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் தனது பிட்னசையும் தொடர்ந்து மெயின்டெயின் செய்து கொண்டு வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகசெயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது தனது வொர்க் அவுட் சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை பெற்றிருக்கும் ஜோதிகா பகிரும் பதிவுகள் எல்லாம் இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்க்கும்.

இதையும் படிங்க : தமன்னாவின் திடீர் ஆன்மீக பயணம்! நெற்றியில் திருநீறு.. கழுத்தில் மாலை..

இந்நிலையில் ஜோதிகா வெளியிட்டிருக்கும் சமீபத்திய வொர்க் அவுட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. ஜோதிகா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோவில் அவர் தலைகீழாக தொங்கியவாறு பந்து விளையாடுவதை போன்ற காட்சிகளும் இருக்கின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் 45 வயதிலும் ஜோதிகா இளமையாக இருப்பதற்கு இந்த வெறித்தனமான உடற்பயிற்சி தான் காரணமா எனக்கேட்டு கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

மலையாத்தில் மம்மூட்டி இணையாக ‘காதல் தி கோர்’ படத்தில் நடித்த ஜோதிகா, அடுத்ததாக இந்தி சினிமாவிலும் களம் இறங்க போகிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு இந்தி படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். மாதவன், அஜய் தேவ்கன் போன்றோருடன் ஜோதிகா சேர்ந்து நடித்து வரும் இப்படத்திற்கு ‘சைத்தான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாய் ஐஸ் டீ யை எப்படி செய்வது?

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்