Blood Donation Camp at Kuthalam: 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு ரத்த வங்கி இணைந்து மாபெரும் ரத்த தான முகாமை குத்தாலத்தில் நடத்தினர்

இதில் மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்ற முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசினர்.
Read Also : சீர்காழி குட் சம்மரிட்டன் பள்ளியில் விளையாட்டு விழா
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு 25 யூனிட் ரத்த தானம் செய்தனர்…
நிகழ்வில் அரசு ரத்த வங்கி தலைமை மருத்துவர் அருண் எல்எல்பி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொருளாளர் அஜிஸ்கான், துணைச் செயலாளர் முகமது நசீம் மற்றும் குத்தாலம் கிளை நிர்வாகிகள் முகமது மஹாதீர் சுஹைல் அகமது ஷேக் மைதீன் கலந்து கொண்டனர்…