HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

பல்லாவரம் 9வது மேற்கு வட்ட கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா

jayalitha1

Jayalalitha Birthday in Pallavaram : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா பல்லாவரம் 9வது மேற்கு வட்ட கழகம் சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம்.

சென்னை பல்லாவரத்தில் அதிமுக 9வது மேற்கு வார்டு வட்டக் கழகம் சார்பில் வட்ட கழக செயலாளர் W.அக்ரம் கான் தலைமையில்‌ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : பீட்ரூட் காயில் உள்ள அற்புத சத்துக்கள்!

Jayalalitha Birthday in Pallavaram
Jayalalitha Birthday in Pallavaram

சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணை செயலாளரும் முன்னாள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினருமான ப.தன்சிங் அவர்களும் பல்லாவரம் பகுதி கழக செயலாளரும் முன்னாள் பல்லாவரம் நகர மன்ற துணைத் தலைவருமான த.ஜெயபிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு கழக கொடியேற்றி ஜெயலலிதா அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இதில் பகுதி , வட்ட கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : இந்தியாவில் தடை செய்யப்பட்ட இடங்கள் எது தெரியுமா?

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்