HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

செண்பகச்சேரி மகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்

Senbagacheri mahamariamman

Senbagacheri mahamariamman : மயிலாடுதுறை அருகே உள்ள செண்பகச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப்பணி நிறைவுற்று 8/02/2024 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா கடந்த ஐந்தாம் ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

Senbagacheri mahamariamman
Senbagacheri mahamariamman

தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 8/02/2024 ல் காலை நான்கு கால யாகசாலை பூஜையின் முடிவில் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.மேலும் கிராம கோயில்களான செல்வகணபதி மற்றும் மன்மதீஸ்வரர் கோயில்களிலும் 8/02/2024 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Read Also : Razia Khanam Biography

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்