திருவாரூரில் பிறந்தால் முக்தி.காசியில் இறந்தால் முக்தி. சிதம்பரம் நடராஜரை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரக்கூடிய கோயில் தான் திருவண்ணாமலை என்று சொல்வார்கள். பஞ்சபூத ஆலயங்களில் அக்னி ஸ்தலமாக சொல்லப்படும் திருவண்ணாமலையின் கார்த்திகை தீப ஆன்மிக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
History of Karthigai Deepam
பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்று போட்டி உண்டான போது சிவபெருமானிடம் போய் முறையிட்டனர். அப்போது சிவபெருமான் யார் எனது அடியையும் முடியையும் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்தான் பெரியவர் என கூறி விடுகிறார். பின்பு சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக வானுக்கும் பூமிக்குமாக காட்சி கொடுத்த அந்த ஜோதி நெருப்பு தான் மலையாக மாறியது. சிவனின் அடியை பார்ப்பதற்காக விஷ்ணு பகவான் வராக பன்றி அவதாரமாக மாரி பூமிக்குள் செல்கிறார்.அது போய்க்கொண்டே இருந்தது. விஷ்ணு பகவான் திரும்பி வந்து ஐயனே என்னால் தங்களது அடியை பார்க்க முடியவில்லை என்று கூறி சிவபெருவானிடம் சரணடைந்து விடுவார்.

பிரம்மதேவன் பொய்
மறுபக்கம் பிரம்மதேவர் அன்னப் பறவையாக உருவம் எடுத்து சிவபெருமானின் முடியை பார்ப்பதற்காக செல்வார். ஆனால் பிரம்மதேவராலும் சிவபெருமானின் முடியை பார்க்க முடியாது. ஆனால்அவருடைய தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் தாழம் பூவை பொய்சாட்சி சொல்ல சொல்லி சிவபெருமானின் முடியை பார்த்ததாக பிரம்மதேவன் சொல்லி விடுவார். பிரம்மதேவன் சொல்லும் பொய்யை புறிந்து கொண்ட சிவபெருமான், இனி பூமியில் உனக்கு ஆலயமோ பூஜையோ இருக்காது என்று சாபமிடுவார்.
விஷ்ணு பகவான் உண்மையை சொன்னதால் எனக்கு சமமாக உனக்கு ஆலயங்களும் பூஜைகளும் பூமியில் கிடைக்கும் என்று வரம் அளித்தார். பொய் கூறிய தாழம்பூவை என்னுடைய பூஜையில் உன்னை யாரும் வைக்க மாட்டார்கள் என்று சபித்துவிடுவார் சிவபெருமான். இதன் காரணமாகவே தாழம் பூவை சிவன் பூஜையில் இன்று வரை வைப்பதில்லை.
திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்த சிவபெருமான்:
பிருங்கி முனிவர் சக்தியை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கி கொண்டு வந்தார். அவருக்கு சிவனும் சக்தியும் ஒன்றேதான் என்று உணர்த்துவதற்காக சிவபெருமான் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலையை நடத்துவார். இதனால் பார்வதி தேவி இந்த ஆலயத்தில் வந்து சிவனுடன் மறுபடியும் சேர்வதற்கு தவம் இருப்பார்கள். சிவபெருமான் பார்வதிக்கு காட்சி அளித்த போது தனது இடது பாகத்தில் பாதி உடலாக ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிப்பார். அதன் பிறகு பிருங்கி முனிவர் உண்மையை உணர்ந்தார். இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும் சிவராத்திரி விழா உருவானது என்ற பெருமையை கொண்ட ஆலயம் தான் இந்த திருவண்ணாமலை.
பெயர் காரணம்:
அன்னுதல் என்பதற்கு நெருங்குதல் என்று பெயர். அண்ணா என சொன்னாலே நெருங்கவே முடியாது என்று பொருள் ஆகும். விஷ்ணுவாலும், பிரம்மனாலும் அடியையும், முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் தான் இவை அண்ணாமலை என்கிற பெயர் பெற்றது. ஆகவேதான் இங்கு சிவபெருமான் அண்ணாமலையார் என்றும் இந்த ஊரின் பெயரை திருவண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறது.
நடந்து போகும் முறை:
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால்தான் கைலாயம் சிறப்பு கொண்டதாக இருக்கிறது. ஆனால் திருவண்ணாமலைக்கு லிங்கமே மலையாக இருப்பதால் தான் சிறப்பு. இந்த மலை தான் இந்த ஸ்தலத்திற்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகின்றது. திருவண்ணாமலை கிரிவலம் மிகவும் புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த மலையை சிவ லிங்கமாக நினைத்து ஞானிகளும்,சித்தர்களும், முனிவர்களும் வலம் வருகிறார்கள்.இந்த மலைக்கு காந்த சக்தி இருக்கிறது என்று புவியியல் வல்லுநர்கள் ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்த மலையை சுற்றி வரும் போது எங்கேயாவது ஆரம்பித்து எங்கேயாவது முடிக்க கூடாது. மலையை சுற்றி 14 கிலோமீட்டர் பக்தர்கள் நடந்து தான் செல்ல வேண்டும். வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. இந்த கிரிவலப்பாதையில் 8 திக்கிலும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். அவை எம லிங்கம், வருண லிங்கம், இந்திரலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசானிய லிங்கம் ஆகும். இந்த 8 லிங்கங்களையும் வணங்கி கொண்டு தான் கிரிவலம் செல்ல வேண்டும்.
மலையை ஒட்டி இருக்கும் பக்கம் செல்லாமல் இடது பக்கமாக செல்ல வேண்டும். நம்முடன் சேர்ந்து சித்தர்களும் நடந்து வருவார்கள் என்பது ஐதீகம். எனவே நாம் நடந்து செல்லும் பொழுது என்ன நினைக்கிறோமோ அதை சித்தர்கள் இறைவனிடம் கொண்டு போவார்கள் என்று நம்பப்படுகிறது. எனவே பேசிக்கொண்டே செல்லாமல் சிவபெறுமானை நினைத்துக் கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கூறியப்படியே நடக்க வேண்டும்.
சந்தர்ப்பம் ஏற்படும் பொழுதெல்லாம் மலையைப் பார்த்து கைகூப்பி தொழ வேண்டும். தொழுதப்பிறகு வேறு திசையில் பார்க்காமல் வானத்து சந்திரனை பார்த்து ஒரு முறை வணங்க வேண்டும்.
(Disclaimer : இந்தக் கட்டுரையானது ஆன்மிக நம்பிக்கை மற்றும் தகவலின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது)
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க

