சாணக்கியரும், அவரும் அவரது அறிவுரைகளும் பல நூற்றாண்டுகள் ஆனப்பிறகும் இன்றளவிலும் பிரபலமானதாக இருக்கிறது. சாணக்கியர் அவரது நீதி சாஸ்திரத்தில் மனிதர்களுடைய நன்மை தீமைகள் குறித்த தகவல்களைப்பற்றி விரிவாக பகிர்ந்துள்ளார். ஒருவர் அவரது நற்பண்புகளின் காரணமாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம், அதேபோல ஒருவரின் தீய எண்ணங்கள் வெற்றி அடையும் விஷயங்கள் தோல்வியில் முடியும்.
ஒருவர் எப்படியான கடின உழைப்பு செய்து கொண்டிருந்தாலும் அவரிடம் இருக்கும் சில குறைபாடுகள் காரணமாக அவர் முயற்சி செய்த உழைப்பினால் வெற்றி காண முடியாமல் அமையும். ஆகவே இது போன்ற சில குறைபாடுகளை செய்யாமல் அந்த செயல்களிலிருந்து எப்போதும் விலகி கொள்ளும் படி மக்களுக்கு அறிவுறுத்துகிறார். ஒருவரின் வாழ்க்கை முறையினாலும் அவருடைய நற்குணங்களாலும் அந்த மனிதரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

மனிதனாக பிறந்த எல்லோரது மனதிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும், அந்த குறைகளை தகுந்த நேரத்தில் உங்களிடமிருந்து விலக்காவிடில் அதனால் ஏற்படும் பிரச்சனை உங்களின் வாழ்க்கை முழுவதும் அதனுடைய தாக்கத்தை உண்டாகும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய சாஸ்திரத்தில் கூறி இருக்கும் நீதியின் படி, ஒரு மனிதனின் தோல்விக்கு வழி செய்யும் அவரின் குணங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.
அமைதியான மனம்
சாணக்கியர் சொல்கிறார் ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு அமைதியான மனம் மிகவும் முக்கியம் என்று அதாவது எந்த ஒரு மனிதனும் மன அமைதி இல்லாமல் இருந்தால் சந்தோஷமாகவும், வெற்றியையும் காண முடியாது. ஒரு நிலையான மனதுடன் இல்லாமல் இருக்கக்கூடியவர்களால் அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமாகவும், அதேபோல எந்த பணிகளையும் நல்ல முறையில் செய்ய முடியாது இது போல இருப்பவர்கள் வாழ்க்கையில் அவருடனே பலவிதமான பிரச்சனைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே மனஅமைதி இல்லாதவர்களால் அவர்களுடைய வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களின் சந்தோஷத்தை பார்த்து பொறாமை
சாணக்கிய நீதியின் படி, பல பேருக்கு மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து பொறாமை இருக்கும். அது போன்ற குணம் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்கள் இல்லாமல் தனியாக இருப்பார்கள், பிறர் வெற்றி அடைவதை கண்டு வருத்தப்படுகிறார்கள். அது போல் உள்ளவர்கள் வாழ்க்கையில் வெற்றி மற்றும் பிறருடைய ஆதரவையும் பெற மாட்டார்கள்.
கட்டுப்பாடற்ற மனம்
சாணக்கியரின் நீதி படி, ஒரு மனிதர் தனது உடலை தனது மனதின் மூலம் கட்டுப்படுத்துகிறார். ஆனால் ஒரு மனிதன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் மனமும் உடலும் எந்த பணியையும் நல்ல முறையில் செய்ய முடியாது. ஆகவே இவர்களின் மனசிதறலால் வெற்றிகளை அடைய முடியாது. இதுவே அவர்களுடைய தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஒழுக்கமின்மை
ஒழுக்கம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் பெற்று இருந்தாலும் அந்த நபர்களால் வாழ்க்கையில் வெற்றி காண முடியாது. அதுபோல உள்ளவர்கள் ஒருவேளை குறுக்கு வழியில் சென்று வெற்றி பெற்றாலும் அது அதிக நேரம் நீடிக்காது. உங்கள் வேலைகளில் வெற்றிபெறுவதற்கு ஒழுக்கத்துடன் அந்த பணியை செய்வது மிகவும் நல்லது. இந்த குணம் இல்லாமல் இருக்கும் எந்த மனிதனும் தனது வாழ்க்கையில் வெற்றியினை பார்க்க முடியாது.
கவனக்குறைவு
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி காண வேண்டும் என்று விரும்பினால், எந்த ஒரு பணியையும் முழு மனதுடன் அர்ப்பணித்து, அந்த வேலையை நேர்மையாகவும் செய்ய வேண்டும். கவனக்குறைவாக வேலை செய்பவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள். ஒருவரின் வாழ்க்கையில் கவனமில்லாமல் இருப்பதே அவருடைய வெற்றிக்கு தடைக்கல்லாக அமைகிறது.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


