Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

+2 கூட முடிக்கல .. ஆனால் இன்று பல கோடிக்கு அதிபதியான நடிகை.. யார் தெரியுமா..?

நடிகை ஆலியா பட் பள்ளிப் படிப்பை கூட முடிக்காத நிலையில் இன்று புகழ்பெற்ற நடிகையாகவும், பல கோடிக்கு அதிபதியாகவும் இருந்து கொண்டிருக்கிறார். A multi crore actress…

நடிகை ஆலியா பட் பள்ளிப் படிப்பை கூட முடிக்காத நிலையில் இன்று புகழ்பெற்ற நடிகையாகவும், பல கோடிக்கு அதிபதியாகவும் இருந்து கொண்டிருக்கிறார்.

A multi crore actress

A multi crore actress
A multi crore actress

திரையுலகில் பல நட்சத்திரங்களின் குழந்தைகள், இளம் நடிகர்களாக வெற்றிகரமாக நடித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ஒரு சிலர் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், ஜொலிக்கத் தவறி, வாய்ப்புகள் கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்தி நடிகை ஆலியா பட் இதில் முதல் ரகத்தைச் சேர்ந்தவர்.நடிகை ஆலியா பட் இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் ஆவர், இவர் பாலிவுட்டில் கரண் ஜோஹரின் ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பாராட்டுகளை பெற்ற ஆலியா பட், தற்போது பல விருதுகளை வென்றிருக்கிறார்.

A multi crore actress (1)
A multi crore actress (1)

ஆனால், அவர் பிளஸ் 2 கூட முடிக்கவில்லை. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, நடிப்பதற்கு ஆர்வமாக வந்த ஆலியா பட்டுக்கு அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் குவிந்ததால், இன்றைய தேதியில் அவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். மற்ற குழந்தை நட்சத்திரங்களைப் போன்று இருக்காமல், கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு நட்சத்திரக் குழந்தையாக உள்ளதால், சில நன்மைகளும், சலுகைகளும் உள்ளதாக, நெப்போடிசம் பற்றிய கருத்துகளை ஏற்றுக் கொண்ட ஆலியா பட, அதற்காக ஏனோதானோ என்று நடிக்காமல், தனது முழு திறமையினையும் வெளி கொண்டு வந்து தான் இன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

A multi crore actress (2)
A multi crore actress (2)

நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியா பட்டுக்கு ராஹா கபூர் என்ற பெண் குழந்தை இருக்கின்றது. தற்போது பாலிவுட்டில் அதிகமாக சம்பளம் பெரும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஆலியா பட், தொடர்ந்து திரைப்படங்களையும் தயாரித்து கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் படங்களைப் போலவே, இவர் தயாரிக்கும் திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றன. அதற்கு ஆலியா பட்டுக்கு உள்ள ரசிகர் பட்டாளமே காரணம்.

விலையுயர்ந்த வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்து இருக்கும் ஆலியா பட், பல தொழில்களையும் செய்து கொண்டு வருகிறார். இதனால், இவர் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார். தென்னிந்திய திரைப்படமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்திலும் நடித்த ஆலியா பட்டுக்கு தற்போது இலங்கையிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

A multi crore actress (3)
A multi crore actress (3)
புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க