Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

சக மருத்துவரிடம் மார்பக புற்றுநோய் என்று சொல்லி பெருந்தொகையை வாங்கி ஏமாற்றிய பெண்

கனடாவில் அழகான பெண் மருத்துவர் ஒருவர் சக மருத்துவரிடம் பெருந்தொகையை வாங்கி ஏமாற்றியதுடன், போலியான ஆவணங்களால் தற்போது மருத்துவராக பணி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளார். doctor fake…

கனடாவில் அழகான பெண் மருத்துவர் ஒருவர் சக மருத்துவரிடம் பெருந்தொகையை வாங்கி ஏமாற்றியதுடன், போலியான ஆவணங்களால் தற்போது மருத்துவராக பணி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளார்.

doctor fake cancer to scam
doctor fake cancer to scam

ஏமாற்றிவிட்டு மாயமாகியுள்ளதாக

குறித்த மருத்துவர் மொத்தமாக 160,000 டாலர் தொகையை ஏமாற்றிவிட்டு மாயமாகியிருப்பதாகவே சொல்லப்படுகிறது. Monica Kehar என்பவர் தமக்கு மார்ப புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக குறிப்பிட்டு தமது சக மருத்துவர் Meaghan Labine என்பவரிடம் இருந்தே பெருந்தொகையை வாங்கி ஏமாற்றியுள்ளார்.

image 2
doctor fake cancer to scam

கடந்த 2018ல் இருவரும் முதன் முறையாக சந்தித்துள்ளனர். இருவரும் குடும்ப நல மருத்துவராக பயிற்சி பெற்றுள்ளனர். தமக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்று குறிப்பிட்டு பலமுறை பணம் கைப்பற்றியிருக்கிறார்.

அது மட்டுமின்றி, வாங்கிய தொகையை கண்டிப்பாக திருப்பித் கொடுப்பதாக ஒப்பந்தமும் முன்னெடுத்துள்ளார். ஆனால் அவரின் பணத் தேவையானது குறையவே இல்லை என்றும் மருத்துவர் Meaghan Labine தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தில் மோனிகா கெஹருக்கு கேன்சர் இல்லை என்றும், அவர் இதுவரை சொன்னது எல்லாம் பொய் என்றும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி, அவர் மருத்துவப் படிப்பில் இருந்தே வெளியேற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

ஆவணங்களில் முறைகேடு

2020 நவம்பர் மாதம் கெஹர் தொடர்பில் மருத்துவத்துறை மூலம் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. அவர் 2019 பிப்ரவரி மாதம் குடும்ப நல மருத்துவராக பயிற்சி பெற முதலாம் ஆண்டு மாணவராக பதிவு செய்துள்ளார். ஆனால் உரிய உரிமம் பெறுவதற்கு முன்னரே, மருத்துவர் என குறிப்பிட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இந்த பிரச்சனை உரிய அதிகாரிகளுக்கு தெரிய வரவே, கெஹர் சிகிச்சை கொடுப்பதை நிறுத்தியுள்ளார். அது மட்டுமின்றி அவர் ஆவணங்களில் முறைகேடு செய்திருப்பதும் அம்பலமானது.

image 1
doctor fake cancer to scam

அது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உளவியல் ரீதியான நெருக்கடியால் உண்டான குழப்பம் என விளக்கமளித்திருக்கிறார். அவர் மீதான விசாரணையின் முடிவில் அவரை மருத்துவப் பணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

மேல்முறையீடு செய்திருந்தும், அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் கனடாவில் அவர் மருத்துவராக பணிசெய்ய முடியாத சூழல் உண்டாகியுள்ளது.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க