Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

நவம்பர் 23 – ல் அகவை நாள் காணும் இளம் தலைவர்… யார் அந்த சமூக போராளி ?

The young leader who will celebrate his birthday on November 23rd..

நவம்பர் 23 – ல் அகவை நாள் காணும் இளம் தலைவர்.*

இளம் வயதில் இளமையை கொண்டாடும் பருவத்தில் எளிய பிம்பத்திலிருந்து இளம் தலைவராக உருவெடுத்து சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் சமூகப் போராளி !

யார் அந்த சமூக போராளி ?

தேனி மாவட்டம் , உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் – சித்ரா இணையரின் மகனாகப் பிறந்தவர் தான் கு.அரவிந்த் (Aravind) ஓடைப்பட்டி அரசு பள்ளியில் தமிழ் வழியில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து அதன் பின்பு வீரபாண்டி சௌராஷ்டா கல்லூரியில் BA ஆங்கிலம் பட்ட படிப்பு முடித்துவிட்டு தேசிய மாணவர் உரிமைகள் கழகம் என்ற அமைப்பில் உறுப்பினராக இணைத்து மக்கள் பணியாற்றினார்.

தேனியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாபெரும் விருது வழங்கும் விழா ஒற்றையழாக நடத்தி பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கினார் இதில் பல மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் , சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல், மரக்கன்று வழங்குதல் என பல்வேறு மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பின்பு குறுகிய காலத்திலேயே அதே அமைப்பில் தேனி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். சிறப்பான மக்கள் பணியின் மூலம் பல்வேறு பணிகளை செய்தார். அதன் பின்பு மூன்று ஆண்டுகள் செயல்பட்டு மேற்படி அமைப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்.

மக்கள் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வந்து நிலையில் பின்னர் நமது தமிழக சமூக நீதி இயக்கம் என்ற இயக்கத்தினை திரு DR.KPR பார்த்திபனும் துவங்கி பல மக்கள் பணிகளை செயல்படுதி வந்தார். பல இயக்கங்களிலும் சங்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு அந்த இயக்கத்திலிருந்து கிடைக்கும் நன்மைகளை கடை கோடி மக்களுக்கும் பெற்றுக் கொடுத்தார். சாதாரண கிராமத்தில் பிறந்த இவர் மாநிலத் துணைத் தலைவரான சென்னை வரை வலம் வரத் தொடங்கினார் அதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகளையும் உலக சாதனைகளையும் பெற்றார்.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தான் பட்ட கண்ணீரையும் காயங்களையும் பிறர் ஒருபோதும் பட்டுவிடக்கூடாது என்று செல்லும் இடமெல்லாம் கூறி மகத்தான மக்கள் பணியினை முன்னெடுத்துச் செல்கிறார். சுற்றி இருப்பவர்கள் சில நேரம் துரோகத்தால் வீழ்த்தினாலும் துவண்டு விடாமல் எழுந்து வெற்றி நடை போடுகிறார்.

கடந்த ஏழு ஆண்டு காலமாக இவர் செய்த சாதனைகள் சில….

  1. தமிழகம் முழுவதும் இதுவரையில் 1860 இரத்ததான தேவைகள் தன்னிடம் தகவல் வந்ததும் அதில் பல்வேறு குருதி கொடையாளர்கள் தொடர்பின் மூலம் 900 இரத்ததான தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.
  2. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இலவச வீட்டு மனை பட்டா தொடர்பாக வந்த கோரிக்கை மனுக்களை கையில் எடுத்து 8 மனுக்களில் ஏழு நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க வழிவகை செய்து கொடுத்துள்ளார்.
  3. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மக்கள் கோரிக்கை தொடர்பாக அவர் நடத்திவரும் இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட 120 மனுக்களில் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டும் மனுசெய்தும் 80 நபர்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
  4. மக்கள் நலன் சார்ந்து 100க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் அணுக்கள் தாக்கல் செய்துள்ளார்.
  5. பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகள் வைத்து தனக்கான தலைமை பண்பையும் சமூகத்தின் நடைமுறைகளையும் கற்றுக் கொண்டுள்ளார். ஏழை ,எளிய குடும்பத்தில் பிறந்து பல்வேறு கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலும் இளம் வயதில் இயன்ற பணிகளை செய்துள்ளார்.

இளம் வயதில் பல்வேறு பொறுப்புகளிலும் சமூக சேவையிலும் படிப்பிலும் குடும்பத்திலும் சமூகத்தின் மீதும் மிகுந்த கவனம் செலுத்தி வயதுக்கு மீறிய செயலையும் செய்து வரலாறு படைத்த தியாக செம்மல் . ❤️

பலரும் அறியாத அரவிந்த் (Aravind)❤️

சாதாரண சென்டரிங் கான்ட்ராக்டர் குபேந்திரன் அவர்களின் மகன் தமிழ் மண்ணின் மீதும், தமிழ் மக்கள் மீதும் அதீத பற்றின் காரணமாக ஐந்தாண்டு காலம் தொய்வில்லாத மக்கள் பணியை பல்வேறு இடையூறுகள், போராட்டங்கள், விமர்சனங்கள், காயங்களுக்கு மத்தியிலும் செய்து வரும் , மக்கள் போராளி, இளம் தலைமுறையினரின் எடுத்துக்காட்டு , தியாக செம்மல், தமிழகத்தின் தவ புதல்வன் , பல இயக்கம் கண்ட இளம் தலைவர். (Hon) K.அரவிந்த் BA. அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்…..

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க