Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

ஒரு மாதம் இயக்குனரிடம் பேசாமல் இருந்த விஜய்!.. கில்லி படப்பிடிப்பில் நடந்த அந்த சம்பவம்!.

விஜயின் கேரியரில் சூப்பர் வெற்றி படமாக அமைந்த படம்தான் கில்லி. 2004ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு முன் விஜய் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கில்லி படத்தின் வெற்றி…

விஜயின் கேரியரில் சூப்பர் வெற்றி படமாக அமைந்த படம்தான் கில்லி. 2004ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு முன் விஜய் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கில்லி படத்தின் வெற்றி அவரை வசூல் சக்கரவர்த்தியாக மாற்றியது. இப்படம்தான் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் முதலாளிகளுக்கு விஜய் மீது அதீத நம்பிக்கை வர முக்கிய காரணமாக அமைந்தது.

தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து வெற்றி பெற்ற ஓக்கடு படத்தின் ரிமேக்தான் இந்த கில்லி. ஆனால், படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டு இப்படத்தை உருவாக்கினார் இயக்குனர் தரணி. படம் பார்த்த பாக்கியராஜ் போன்ற பலரும் தெலுங்கு படத்தை விட தமிழ் வெர்சன் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள்.

Vijay didn't talk to the director
Vijay didn’t talk to the director

அவ்வளவு ஏன். ஓக்கடு படத்தின் கதாநாயகனான மகேஷ் பாபுவே ஓக்கடுவை விட கில்லி நன்றாக இருந்ததாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார். கில்லி படத்தில் விஜய்க்கு இணையாக திரிஷா நடித்திருந்தார். பிரகாஷ்ராஜ், மதுரை முத்துப்பாண்டியாக கலக்கி இருந்தார். பிரகாஷ்ராஜின் நடிப்பு தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு

அதோடு, வித்யாசாகரின் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். குறிப்பாக ‘அப்படிப்போடு போடு’ பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போடச்செய்தது. 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இப்படம் 20 கோடி வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மற்றும் இயக்குனர் தரணி உள்ளிட்டோர் விஜயை நேரில் சந்தித்து தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

கில்லி படத்தில் தாமு, நாகேஷ் பிரசாத், சாப்ளின் பாலு, மயில்சாமி மற்றும் ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் விஜயின் நண்பர்களாக நடித்திருந்தனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சாப்ளின் பாலு, விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது ‘இப்படம் ஆரம்பித்து ஒரு மாதம் விஜயும், தரணியும் பேசிக்கொள்ளவே இல்லை. ஏனெனில், விஜய் அடிப்படையாகவே கூச்ச சுபாவம் கொண்டவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். ஒருநாள் என்னிடம் ‘என்னடா இப்படியே போய்ட்டிருக்கு’ என கேட்க ‘எல்லாம் சரி ஆயிடும்’ என கூறினேன். சில நாட்களில் ‘விஜய்’ என்று தரணி குரல் கொடுத்தால் ‘அண்ணே’ என்று ஓடுவார் விஜய். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாகிவிட்டனர்’ என சாப்ளின் பாலு கூறி இருந்தார்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க