Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தில், காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக புகார்..

மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தில், பெண்ணை இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்த வாலிபர்களை தட்டி கேட்ட தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியீடு,…

மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தில், பெண்ணை இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்த வாலிபர்களை தட்டி கேட்ட தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியீடு, காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார்.

Pennai iruchakkara vaaganaththil mothu vathu pola vandha vaalibar (1)
Pennai iruchakkara vaaganaththil mothu vathu pola vandha vaalibar

Pennai iruchakkara vaaganaththil mothu vathu pola vandha vaalibar

மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை மேட்டு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் கண்ணன் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி முதல் நாள் அன்று இரவு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கண்ணனின் மகள் அபிநயா மீது முத்து குணா உள்ளிட்ட சிலர் இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்து சென்றுள்ளனர். இதனை கண்ணன் தட்டி கேட்டுள்ளார்.

Pennai iruchakkara vaaganaththil mothu vathu pola vandha vaalibar (3)
Pennai iruchakkara vaaganaththil mothu vathu pola vandha vaalibar

தொடர்ந்து மதியழகனின் மகன் சிற்றரசன் பூவரசன் மற்றும் உறவினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கண்ணனின் வீடு புகுந்து கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், கண்ணன் அவரது மனைவி கவிதா சகோதரி பத்மினி ஆகியோர் தாக்குதலில் காயமடைந்தனர். கண்ணனுக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Pennai iruchakkara vaaganaththil mothu vathu pola vandha vaalibar (2)
Pennai iruchakkara vaaganaththil mothu vathu pola vandha vaalibar

இந்நிலையில் மணல்மேடு காவல்துறையினர் காயப்பட்ட தரப்பிற்கும் எதிர் தரப்பிற்கும் இடையே சமரசம் மேற்கொண்டதாகவும், கண்ணன் தரப்பு ஒத்துக் கொள்ளாத காரணத்தால், வீடு புகுந்து தாக்கியவர்கள் மீதும் தாக்கப்பட்டவர்கள் மீதும் தலா மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கண்ணன் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : இன்டர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள் எவை? – தமிழ்நாடு எந்த இடம் உள்ளது தெரியுமா?

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க