தமிழக அரசின் சார்பில் வருடந்தோறும் சிறந்த திரைப்படங்களை தேர்ந்து எடுத்து பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் 2015-ம் வருடத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இறுதிச்சுற்று, தனிஒருவன், 36 வயதினிலே உள்ளிட்ட படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளன.
TN Govt Film Award 2015
மேலும் 36 வயதினிலே படத்துக்கு பெண்களை உயர்வாக சித்தரித்ததற்கான சிறப்பு பரிசும் , சிறந்த படத்துக்கான இறுதிச்சுற்று படத்துக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகின்றன. சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகர் மாதவன் படம் இறுதிசுற்று, சிறந்த நடிகை ஜோதிகா படம் 36 வயதினிலே இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் வை ராஜா வை படத்துக்காக கௌதம் கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசும், இறுதிச்சுற்று படத்துக்காக ரித்திகா சிங்கிற்கு சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசும் வழங்கப்படவுள்ளன.

சிறந்த வில்லன் நடிகருக்கான விருது தனி ஒருவன் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்த்சாமிக்கும் அஞ்சுக்கு ஒண்ணு படத்தில் நகைச்சுவையாக நடித்த சிங்கம் புலிக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதும் மேலும் அபூர்வர் மகான் படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது தலைவாசல் விஜய்க்கும், நடிகை கௌதமிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது படம் பாபநாசம்.
இதையும் படிங்க : தமன்னாவின் திடீர் ஆன்மீக பயணம்! நெற்றியில் திருநீறு.. கழுத்தில் மாலை..
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராக்கு 2015 ஆம் வருடத்திற்கான சிறந்த இயக்குனர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் விருதுதேர்வு செய்யப்பட்டுள்ளார். தனி ஒருவன் படத்திற்காக சிறந்த கதாசிரியராக மோகன் ராஜா மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக ராம்ஜியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தனி ஒருவன் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளராக கோபி கிருஷ்ணாவும், பசங்க 2 படத்துக்காக சிறந்த கலை இயக்குனராக பிரபாகரனும், தனி ஒருவன் படத்திற்காக சிறந்த நடன ஆசிரியராக பிருந்தாவும் தேர்வாகி உள்ளனர்.

ஜிப்ரான் உத்தமவில்லன், பாபநாசம் படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், 36 வயதினிலே படத்துக்காக சிறந்த பாடகியாக கல்பனா ராகவேந்தரும், வை ராஜா வை படத்துக்காக சிறந்த பின்னணி பாடகராக கானா பாலாவும் தேர்வாகி உள்ளனர். மேலும் தேர்வு செய்துள்ள திரைப்பட கலைஞர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில் வரும் ஆறாம் தேதி மாலை 6 மணியளவில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மானசா சவுத்ரி…
இவ்விழாவில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பே சாமிநாதன் விழாவிற்கு தலைமை தாங்கி விருந்தினர் அனைவருக்கும் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசு, ஊக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேருரையாற்றுகிறார். மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலை துறை அமைச்சர் கே பி சேகர் பாபுமற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


