HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

சென்னை: அதிமுகவின் முன்னாள் எம் எல் ஏ வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அதனால் அதிமுகவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் வரக்கூடிய இந்த நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக – அதிமுக இடையிலான கூட்டணி முறிவு ஏற்பட்டது. திமுகவை விமர்சிப்பதற்கு இணையான கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவையும் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து அதிமுகவினரை சீண்டி வந்தார். அண்ணா, ஜெயலலிதாமற்றும் எடப்பாடி பழனிசாமி போன்ற தலைவர்களை அவர் நேரடியாக தாக்கி விமர்சித்து பேசியதால் இனியும் பாஜகவுடன் கூட்டணியை தொடர முடியாது என்று அதிமுக முடிவெடுத்தது.

Venkatachalam
Venkatachalam

அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகி கொள்ள போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதிமுக கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக உடனான கூட்டணி முறிவின் முடிவை உறுதிப்படுத்தியதுடன் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி இல்லை என்று அறிவித்தார். பாஜக தலைவர் அண்ணாமலையையும், பாஜகவையும் அதிமுக தலைவர்களும் விமர்சித்து பேசி வருகின்றனர். பாஜக,அதிமுகவை தவிர்த்து ஒரு கூட்டணியை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே, இரு கட்சிகளிலும் மாறிமாறி நிர்வாகிகளை தங்கள் கட்சிபக்கம் இழுத்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் அதிமுக எம் எல் ஏ வெங்கடாசலத்தை பாஜக தங்கள் பக்கம் இழுத்துள்ளது.

ExMLA Admk Venkatachalam Join In BJP

2001 முதல் 2006 வரை சேலம் 1 சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ வாக பணியாற்றியவர் வெங்கடாசலம்.பின்னர் 2008 ல் தொகுதி மறுசீரமைப்பில் 1, 2 என்று இருந்த சேலம் தொகுதிகள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, அதிமுவில் கட்சியில் செயல்பட்டு வந்த வெங்கடாசலத்திற்கு போட்டியிட சீட் கொடுக்கவில்லை. இந்தநிலையில், இன்று அவர் பாஜகவில் தன்னுடைய ஆதரவாளர்களோடு இணைந்துள்ளார். அதனால், அதிமுக கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

பாஜக மாநில துணைத்தலைவர்கள் கரு. நாகராஜன் மற்றும் கே. பி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தமது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் எம் எல் ஏ வெங்கடாசலம் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவினர் வேறு பார்டர் வேட்டிகளை கட்டி இருந்த நிலையில், வெங்கடாசலம் பாஜக கரை வேட்டி, துண்டுடன் வந்து பாஜகவில் இணைந்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் இன்றைய தினம், 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியலில் செயல்பட்டுவரும் சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் அவர்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது கொண்டுள்ள பற்றால், ஈர்ப்பால், தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர்கள் கரு. நாகராஜன் மற்றும் கே. பி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில்,தனது ஆதரவாளர்களோடு பாஜகவில் இணைந்துள்ளார்.

வெங்கடாசலம் மற்றும் அவருடன் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் மனதார வரவேற்று மகிழ்வதோடு, தூயதோர் அரசியலை முன்னெடுத்து செல்லும் தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகளிலும், அவர்களுடைய அரசியல் பங்களிப்பையும், அரசியல் அனுபவத்தையும் கோருகிறேன் என பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்