Pongal celebration Mayiladuthurai : மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி ஒன்றில் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம், மாணவ மாணவிகள் பொங்கல் பொங்கி உற்சாக குரல்:-

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
Read Also : குழந்தைகள் வரைந்த ஓவியம் ஏலத்தில்விட்டு புற்று நோயாளிகளுக்கு உதவி
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறையில் இருந்து தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாணவ மாணவிகள் ஜாதி மத பாகுபாடுகள் இல்லாமல் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி கொண்டாடினர். தொடர்ந்து மாணவ மாணவிகளின் சாகச விளையாட்டு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


