Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மயிலாடுதுறையில் 69 வருடம் ராதா கல்யாண மஹோத்ஸவம்

69th Radha Kalyana Mahotsavam : மயிலாடுதுறையில் 69 வருடம் ராதா கல்யாண மஹோத்ஸவம், தமிழகம் முழுவதுமிருந்து புகழ்பெற்ற பாகவதர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களுக்கு கோலாட்டத்துடன்…

69th Radha Kalyana Mahotsavam : மயிலாடுதுறையில் 69 வருடம் ராதா கல்யாண மஹோத்ஸவம், தமிழகம் முழுவதுமிருந்து புகழ்பெற்ற பாகவதர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களுக்கு கோலாட்டத்துடன் ஆடி பாடி கொண்டாடினர்,ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:

69th Radha Kalyana Mahotsavam
69th Radha Kalyana Mahotsavam

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஸ்ரீ ராதா கல்யாண ட்ரஸ்ட் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் விழா கடந்த 23 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து புகழ் பெற்ற பாகவதர்கள் கலந்து கொண்டு கீதகோவிந்தம் அஷ்டபதி பஜனை நாம சங்கீர்த்தனம் திவ்ய நாம பஜனை சங்கீத உபன்யாசம் போன்றவை நடைபெற்றது.

தொடர்ந்து25/02/2024 ல் ராதா கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு உஞ்சவத்தி அஷ்டபதி பஜனை திவ்யநாம பஜனை மற்றும் பாகவத பஜனைகளுக்கு கோலாட்டத்துடன் ஆடிப் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதை தொடர்ந்து பெண்கள் மங்கலப் பொருட்களை சீர் வரிசையாக எடுத்து வந்து சமர்ப்பணம் செய்தனர்

இதையும் படிங்க : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

அதனை தொடர்ந்து திவ்ய நாம பஜனை திருமாங்கல்ய தாரணம் எனப்படும் ஸ்ரீ ராதா கல்யாணம் நடைபெற்றது இதன் பிறகு மகா தீபாராதனை செய்யப்பட்டது.முன்னதாக பெண்கள் கலந்து கொண்டு, திருமணம் சம்பந்தமான சடங்குகளை செய்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடி பாடி வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க : குத்தாலம் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆலய திருக்கல்யாணம் உற்சவம்

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க