Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினருக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர்கள் முழக்கம்

Teachers slogan demanding equal pay : நாகையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் பரிசாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினருக்கு சம வேலைக்கு…

Teachers slogan demanding equal pay : நாகையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் பரிசாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினருக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர்கள் முழக்கம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றம் செய்யாமல் தொடர்ந்து காலதாமதம் செய்யும் தமிழக அரசை கண்டித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1/3/2024 லில் 12 வது நாகை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராடி வருகின்றனர். இந்நிலையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமாக ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம், தேர்தல் வாக்குறுதி எண் 311 படி இடைநிலை ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழக முதல்வரின் பிறந்த நாள் பரிசாக எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க : பெயரை பார்த்து ராசி கண்டுபிடிப்பது எப்படி.?

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு செயலாளர் பார்த்தசாரதி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.

இதையும் படிங்க : சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க