Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார் …

Vijayakanth: சென்னை மியாட் மருத்துவமனையில் கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த…

Vijayakanth: சென்னை மியாட் மருத்துவமனையில் கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் காலமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல் நலம் சரியாகி வீடு திருப்பினார். பிறகு தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களை உற்சாகமூட்டினார்.

Vijayakanth
Vijayakanth

இந்த நிலையில் நேற்று மாலை உடல் நல குறைவு ஏற்பட்டதால் விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொரோனாத்தொற்று விஜயகாந்திற்கு இருப்பதாகவும் அதனால் அவர் சுவாசிப்பதில் சிக்கல் உள்ளதாகவும் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து கொண்டுள்ளதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலையில் அறிவித்திருந்தது.

கேப்டன் விஜயகாந்த் காலமானார் | Vijayakanth

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பாக விஜயகாந்த் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வ செய்தியை மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருடைய மறைவு தமிழக மக்களையும் தேமுதிக தொண்டர்களையும் மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நடிகர் விஜயகாந்த் அவர்களின் உடலானது மருத்துவமனையிலிருந்து விருக்கம்பக்கத்திலுள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

Read Also : பற்களில் மஞ்சள் கரை போக வீட்டு வைத்தியம்

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க