Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

திருக்கடையூரில் எல்கை பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு விழா குழு சார்பில் ஆலோசனை கூட்டம்

Elkai race at Thirukkadaiyur : காணும் பொங்கலை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் எல்கை பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு விழா குழு சார்பில் ஆலோசனை கூட்டம்…

Elkai race at Thirukkadaiyur : காணும் பொங்கலை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் எல்கை பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு விழா குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது:

பொங்கலை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் வருடம் தோறும் காணும் பொங்கல் தினத்தில் 8 ஊராட்சி சார்பில் குதிரை மற்றும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். பாரம்பரியமாக நடந்துவரும் இந்த பந்தயத்தை நடத்துவதற்காக திருக்கடையூரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Elkai race at Thirukkadaiyur
Elkai race at Thirukkadaiyur

Elkai race at Thirukkadaiyur

இந்த கூட்டம் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் ஒத்துழைப்போடு எல்கை பந்தயத்தை வெகு சிறப்பாக நடத்துவது. எல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர்கள் மற்றும் திருக்கடையூர், பிள்ளைபெருமாள் நல்லூர், கிள்ளியூர், டி மணல்மேடு, காழியப்பநல்லூர், மாணிக்கப்பங்கு, தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக எல்கை பந்தயத்தை நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

பற்களில் மஞ்சள் கரை போக வீட்டு வைத்தியம்

மேலும், அந்த விழாவிற்கு அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பி மற்றும் முன்னாள் எம்எல்ஏ இவர்களை அழைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது. முன்னதாக கூட்டத்தில் விஜயகுமார் தலைமையில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு விழாக்குழு அமைக்கப்பட்டது. இந்த போட்டியானது வருகிற 2024 ஆம் வருடம் ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குதிரை மற்றும் மாட்டுவண்டிகள் பங்கேற்கும் என்பது குறிப்பித்தக்கது.

Read Also : பூனையை கனவில் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா ?

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க