Kameswaram Kovil Beach : தை அமாவாசையையொட்டி, காசிக்கு இணையான புண்ணியம் தரும் காமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஏராளமான மக்கள் வங்க கடலில் புனித நீராடினர்.

தை அமாவாசையையொட்டி காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஏராளமான மக்கள் 9/02/2024 லில் கடலில் புனித நீராடினர். மாதந்தோரும் வரும் ஒவ்வொரு அமாவாசை நாளும் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது.
இதில் தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு கொண்டதாகும். தை அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து ஆசிகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
அதன்படி 9/02/2024 லில் காமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் மற்றும் காய்கறிகளை படைத்தும், எள், நவதானியம், பிண்டம் வைத்து பின்னர் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினர். அதனை தொடர்ந்து கடற்கரையில் அமைந்துள்ள நவநீதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பக்தர்கள் அங்கு ஈஸ்வரனை தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை தினத்தில் காமேஸ்வரம் கடலில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு நலன்களை கருதி, அங்கு மாவட்ட காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் காமேஸ்வரம் மீனவ கிராமம் சார்பில் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


