Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மயிலாடுதுறையில் இரண்டாவது புத்தகத் திருவிழா தொடக்கம்

2nd book festival in Mayiladuthurai : மயிலாடுதுறையில் இரண்டாவது புத்தகத் திருவிழா தொடக்கம்: எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன், கூடுதல் ஆட்சியர் ஷபீர்ஆலம் உள்ளிட்டோர்…

2nd book festival in Mayiladuthurai : மயிலாடுதுறையில் இரண்டாவது புத்தகத் திருவிழா தொடக்கம்: எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன், கூடுதல் ஆட்சியர் ஷபீர்ஆலம் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்:-

2nd book festival in Mayiladuthurai
2nd book festival in Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது புத்தகத் திருவிழா 2/02/2024 ல் தொடங்கியது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவை மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் மற்றும் ப.பா.சி இணைந்து நடத்தின.

இந்த விழாவை, மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், கூடுதல் ஆட்சியர் ஷபீர்ஆலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் தொடங்கி வைத்து, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை விளக்கும் திட்டவிளக்க கண்காட்சி அரங்குகள் மற்றும் புத்தக அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து, நடைபெற்ற தொடக்க விழாவில், புத்தகத்திருவிழாவில் பங்கேற்று கொண்டவர்களுக்கு கூப்பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வானவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Read Also : குத்தாலம் மஹா மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

இந்த புத்தகத் திருவிழாவில், தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்களின் 80 புத்தக விற்பனை அரங்குகள் மற்றும் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டவிளக்க கண்காட்சி அரங்குகளும் இடம் பெற்றுள்ளது. மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், வாசிப்பாளர்களுக்கான புத்தகங்களும், பொதுஅறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளத் தேவையான புத்தகங்களும் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மண்ணின் மைந்தர் எழுதிய புகழ்பெற்ற நாவல்களுக்கு தனி அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது. நாள்தோறும் புகழ்பெற்ற 20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும்,நாடகம், பட்டிமன்றம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. விழாவில், தினந்தோறும் பரிசு கூப்பன் வழங்கப்பட்டு, குழுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க