HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

Neela Puligal : மக்கள் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்களுக்கு நீலப்புலிகள் இயக்கத்தின் மாவீரர் டிஎம்.உமர்ஃபாருக் விருது..!

neelapuligal

Neela Puligal : நீலப்புலிகள் இயக்கத்தின் மாவீரர் டிஎம்.உமர்ஃபாருக் விருது மக்கள் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் தெற்கு வீதியில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உண்மை குடிதாங்கி என்று போற்றப்படும் மாவீரர் டிஎம்‌.மணி (எ)டிஎம்.உமர் ஃபாருக் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நீலப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் டிஎம். புரட்சிமணி அவர்களின் தலைமையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Read Also :எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனின் சம்பளம் மாதம் இதனை லட்சமா ?வைரலாகும் தகவல்கள் !

Neela Puligal : மக்கள் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்களுக்கு விருது..!

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் தலித் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு எல்லாம் எந்தவித சமரசமும் இன்றி பணம் வாங்காமல் வாதாடி ஏழை எளிய மக்களுக்கு சட்ட அரணாக விளங்கி நீதியை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர் பொ. ரத்தினம் அவர்களுக்கு மாவீரர் டிஎம்.உமர்ஃபாருக் அவர்கள் பெயரில் விருது வழங்கப்பட்டது.

Neela Puligal : மக்கள் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்களுக்கு நீலப்புலிகள் இயக்கத்தின் மாவீரர் டிஎம்.உமர்ஃபாருக் விருது..!

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமத்துவ மக்கள் படை கட்சியின் தலைவரும் முன்னாள் மாவட்ட ஆட்சியரும்,எழுத்தாளருமான. சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் கரங்களால் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ‌சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நீலப்புலிகள் இயக்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Watch Video : வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்களுக்கு நீலப்புலிகள் இயக்கத்தின் விருது

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்