Captain Vijayakanth Mayiladuthurai : கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி மயிலாடுதுறையில் தேமுதிக நிர்வாகிகள் பேரணியாக வந்து அவருடைய திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார்.

இதனிடையே தமிழகமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ள நிலையில் சென்னையில் அமைத்துள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடலுக்கு நிர்வாகிகளும், திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் பொதுமக்களும்.தொண்டர்களும்,ரசிகர்களும் மற்ற முக்கிய பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Watch Video : தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார் …
Captain Vijayakanth Mayiladuthurai : தேமுதிக நிர்வாகிகள் பேரணி
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சின்ன கடை தெரு மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அனைத்து நிர்வாகிகள் ஒன்றிணைந்து மலர்கள் தூவி மரியாதை செய்தார்கள். மேலும், அவருக்கு மௌன அஞ்சலியும் வீரவணக்கமும், முழக்கங்களும் முழங்கப்பட்டது. முன்னதாக நிர்வாகிகள் ஏராளமானோர் பேரணியாக வருகை தந்தனர்.
Read Also : விஜயராஜ் விஜயகாந்த் ஆக மாறியது ..?
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


