Tharangambadi Sudden road blockade : தரங்கம்பாடி அருகே வீடு எரிந்து நாசமானது, தீயணைப்பு வாகனம் சாலை வசதி இல்லாமல் உள்ளே செல்ல முடியாத அவலம், பொது மக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாமக்குடி ஊராட்சி ஒன்றியம் அப்பராசபுரம் புத்தூரில் உள்ள காலனி தெருவில் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. அந்த ஊரில் வசிக்கும் மக்கள் சாலை வசதி, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகிறார்கள்.

Tharangambadi Sudden road blockade
இந்நிலையில் இந்த தெருவில் வசிக்கும் செங்கோடன் வயது 35 என்பவரது கூரை வீடு இன்று காலை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பொறையாறு தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து விரைந்து வந்தனர்.ஆனால் அப்பகுதியில் தீயணைப்பு வாகனமானது சாலைவசதி இல்லாததால் வீடு எறிந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை.
Read Also : Iniya Name Meaning in Tamil | இனியா பெயருக்கான விளக்கம்
இதனால் முற்றிலுமாக வீடு எறிந்துவிட்டது. இதனை அடுத்து அந்த ஊர் பொது மக்கள் சென்னை – நாகை நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்கள் கோஷங்கள் போட்டார்கள். மேலும், சுமார் 1 மணி நேரம் சாலை மறியல் நீடித்ததால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிற்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் மற்றும் பொறையார் போலீசார் தகவல் அறிந்து அங்கு வந்தார்கள். பின்னர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் 1 மணி நேரதிற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Read Also : டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால்?
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


